பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I54 எதிராக அவளுக்கு உதவ யார் இருக்கிருர்கள் ? புதிதாக யார் வாப்போகிருர்கள்? இரண்டும் இல்லை. ஆகவே இன்று என் காட்டிலே மழைதன்...... ‘...... ஆகா! அவள் எப்படித்தான் இருக்கிருள்! அடேயப்பா! தேக காக்தி கண்ணேப் பறிக்கிறதே அழகு அறிவைத் கிணறச் செய்கிறதிே எந்த முட்டாளுக்கு வாழ்க்கைப்பட்டாளோ அந்த மடையன் இந்த மடக்கொடியை வைத்துக் கொண்டு வாழ வகை அறியாமல் இவளே நடுச் சக்தியிலே விட்டு விட்டான் ! '.பார்த்தால் கர்ப்பினி போன்று தோன்றுகிருள். காப்பிணிதானே, அல்லது சரீரத்தின் அமைப்பே அப் படியோ ...... இல்லே, இல்லே. கர்ப்பிணி என்றுதான் தோன்று கிறது. ஆம். கர்ம்பம் நேர்மையிலே ஏற்பட்டது அல்ல; அதனுலே. தான் இவள் இப்படிக் கெட்டலேய சேர்ந்திருக்கிறது...எது எப் படிப் போனுல் நமக்கென்ன ? பல ஜன்மங்கள் தவம் செய்தாலும் கிட்டுதற்களிதான அரிய விருந்து இன்று நமக்குக் கிடைக்கப் போகிறது. ! என் பாக்கியமே பாக்கியம் : . . 密 - இப்படிப் பல பல எண்ண மிட்டவாறு சென்ற அச்சுதன், தன் ஜாகைக்குச் சென்று உணவு தயாரித்து, தர்ன் உண்டு ராஜத் திற்கும் சிறிது கையிலே எடுத்துக்கொண்டு கிரும்பி வந்தான். வீட்பைவிட்டுக் கிளம்புகிறபோதே சிறு சிறு துாற்றல்கள் விழுந்து கொண்டிருந்ததால் குடையை எடுத்துகொண்டுதான் கிளம்பினுன். சிறிது துரம் நடப்பதற்குள்ளாகவே மழை வலுத்து விட்டது. எப்படியோ சமாளித்துக்கொண்டு ஸ்டேஷனே வந்து அடைக் தான். இடியும மழையும் மின்னலும் அமர்களப்பட்டன. அவை ராஜத்தின உள்ளத்திலே நடுக்கத்தை உண்டு பண்ணின. அச்சுதனின் உள்ளத்திலே உற்சாகத்தை உண்டு பண்ணின. வெகு நேரம் இடித்தும் கதவு திறக்க்ப்படாதது கண்டு வெகுண்ட அச்சுதன் பீறி எழுந்த மகுே வேகத்தையும் ஆத்திரத் தையும் பிரயாசையுடன் அடக்கிக்கொண்டு, என்ன அம்மா இது? கையை வலிக்கிறதே எவ்வளவு நேரம் நான் இப்படியே கதவை இடித்துககொண்டு மழைச்சாாவில் நிற்பது ? கதவைத் திற " என்று குரல் கொடுத்தான். அதற்குப் பிறகும் அவளால் எப்படி சும்மா இருக்க முடியும்? மனசைத் திடப்படுத்திக்கொண்டு மெல்லக் கதவோரம் சென்ருள். கதவின் இடுக்கு வழியே வெளிப் புறத்தைப் பார்த்தாள். அங்கே என்ன தெரிந்தது ஒரே இருள். அச்சுதன் மேலும் படபடப்புடன் கதவைத் தட்டின்ை. அவள் கதவைத் திறந்து விட்டாள். அச்சுதன் உள்ளே நுழை' வதற்குள் மழையும் சாாலும் போட்டியிட்டுக்கொண்டு முன்ன்ே துழைந்தன. பட்டென்று கதவைச் சாத்தித் தாளிட்டான்