பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்

101

முத்திருளப்பபிள்ளை எனது பிரதானியாக எட்டு அல்லது ஒன்பது ஆண்டுகள் வருவாய்த்துறையை நிர்வகித்து வந்தார். என்னை ஒரு கைதிபோல் நடத்தி, எனது குடிகளையும் கொடுமைக்கு உட்படுத்தி நடத்தி வந்துள்ளார். குயிட்ரென்ட்டைக் கூடுதலாக விதித்தும், புஞ்சை நிலங்களுக்கான வரியை உயர்வு செய்தும் உத்தரவிட்டார். இதனால் அதிருப்தி அடைந்தவர்கள், இந்தக் கொடுமைப்பற்றி நவாப்பிற்கும் கும்பெனியாருக்கும் புகார் செய்தனர்.

இரண்டாவது : சிவகங்கைச் சீமையின் மீது நான் படையெடுத்ததாகச் சொல்லப்பட்டுள்ளது.

பதில் : திரு லாண்டன் கலெக்டராக இருக்கும் பொழுது சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த சின்ன மருது சேர்வைக்காரன் எனது நாட்டைக் கொள்ளையிட்டான். இராமநாதபுரம் சீமையிலுள்ள அபிராமம், பரமக்குடி சாலைக்கிராமம், இராஜசிங்க மங்கலம் ஆகிய ஊர்களைத் தீயிட்டு முக்கியமான குடிகளில் இருவரைக் கொன்றும், அவர்களது நெல் பொதிகளைக் கடத்தியும் சென்றான். மேலும் 500 ஆட்களுடன் ஒரு நாள் இரவு 12 மணிக்கு அமில்தாரரைப் பிடித்துக் கட்டிப்போட்டு அவரது மனைவியின் காதை அறுத்து பணியாள் ஒருவரைக் கொன்று, அமில்தாரரைச் சிறைப்பிடித்துச் சென்றான். எனது வக்கீல் பாலாஜி ராவ் மூலமாக திரு லாண்டனுக்கு இந்த விபரங்களைத் தெரியப்படுத்தினேன். இத்தகைய அத்துமீறலை விசாரணை செய்யுமாறு கோரி ஐந்தாறு கடிதங்கள் அவருக்கு எழுதினேன். எனது சீமையிலுள்ள ஏரிகளுக்கு ஆற்றுநீர் போய்ச் சேராமல் வரத்துக்கால்களை அடைத்தும், அவைகளில் தடுப்பு ஏற்படுத்தியும் சிவகங்கைச் சேர்வைக்காரர் இடைஞ்சலை ஏற்படுத்தினனார்கள். இந்த விபரங்களை திரு லாண்டனுக்குத் தெரியப்படுத்தினதனால் அவர், ஒரு ஹரிக்காராவையும், ஒரு வில்லை சேவகரையும் அனுப்பி, ஆற்றுவெள்ளத்தைத் தடை செய்யாமலிருக்கு மாறு உத்தரவிட்டார். அந்த உத்தரவிற்கு மாறாக தண்ணிரைத் திறந்து விடுவதற்கு சின்ன மருது மறுத்துவிட்டான். இது சம்பந்தமாக திரு லாண்டன் அரசாங்கத்தாருக்கும் வருவாய் வாரியத்திற்கும் அறிக்கைகள் அனுப்பியிருப்பார். அவைகளைப் பரிசீலித்தால் இத்தகைய அக்கிரமங்களில் சின்ன மருது ஈடுபட்டு உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி, கலெக்டரது உத்தரவைப் புறக்