பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. பரமசிவம் 111 வேறு கலியாணம் செய்து கொள்வார். இப்படிக் கூறிய பின் அந்தப் பெண் வாசகர்களைப் பார்த்துக் கேட்கிறாள். இப்பொழுது நீங்களே சொல்லுங்கள். நான் வாழ்வது மனிதத் தொழுவமா? அல்லது மாட்டுத் தொழுவமா? நாற்பதுகளின் இறுதி எழுதப்பட்ட கதைதான் இன்று அடுத்தடுத்து கருத்தரிப்புகள் உடலையும் சுகத்தையும் குறைத்துக் கொள்வதும் கொடுமைகளினூடே பிரசவத்தை எதிர் நோக்கி நிற்பதும், பிரசவத்தின்போது செத்துப் பிழைப்பதும் எத்தனை எத்தனையோ குடும்பங்களில் இருக்கத்தானே செய்கின்றன. மாட்டுத் தொழுவம் - மனிதத் தொழுவம் என்ற நிலையிலிருந்தது. இன்று பெண்கள் முழு விடுதலை பெற்று விட்டார்களா? பெண்ணியம் பேசப்படுகிற இக்காலத்தில், குடும்பச் சூழல்களில் அப்பாவிப் பெண்களின் நிலையை ஊன்றிப் பார்க்க உந்துதல் தருகிறார் விந்தன். பேராசிரியர் கல்கி 1946ஆம் ஆண்டில் விந்தனின் முல்லைக் கொடியாள் நாலுக்கு அளித்த அணிந்துரையை நம்மை மனத்தில் வைத்து கொண்டுதான் இப்படி எழுதியிருக்கிறார். விந்தன் கதைகளைத் தமிழ் மக்கள் ஆர்வத்துடன் வரவேற்றுப் படித்து மேலும் மேலும் கோபமும் ஆத்திரமும் அடைவார்களென்றும், அதன் பலனாகச் சமூகத்திலுள்ள அநீதிகளையும் கொடுமைகளையும் ஒழிக்க ஊக்கங் கொள்வார்கள் என்றும் நம்புகிறேன். (முல்லைக்கொடியாள் பக். 7) விந்தன் காலத்தில் எழுதத் தொடங்கிய சிலர் சிலபல கட்டங்களில் பத்திரிகைகளின் கட்டாயம் மற்றும் வணிக நோக்கு காரணமாக ஆபாசப் படைப்புகளையும் வர்ணனைகளையும் விளக்கங்களையும் எழுதத் தவறவில்லை. ஆனால் விந்தன் இக்கால இரசிகர்களின் பார்வைக்கு ஆபாசமாகத் தோன்றக் கூடியவைகளை மிக நாசுக்காகவும் அறிவுறுத்தலைக் காரணமாக வைத்தும் எழுதிக் காடடினாா.