பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{{4 விந்தன் இலக்கியத் தடம் பால் கெட்டு விட்டால் அது பயனற்றுப் போகிறது. வெளியே கொட்டத்தான் வேண்டும். காரணம், வேறு வழி இல்லை. பாவை ஒருத்தி கெட்டுப் போனாள் என்றால், அவளுக்கு வாழ்வு இல்லை. அவள் சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட வேண்டியவளாகிறாள். அவளுக்கு மறுமலர்ச்சி இல்லை. மன நிறைவும் இல்லை! அப்படியே மடிய வேண்டியதுதான் அவளது விதி: பொன்னுக்கும் பொருளுக்கும் உள்ள மதிப்புக்கூட இந்தக் காலத்தில் பெண்ணுக்கு, அவளுடைய கற்புக்குக்கூட இல்லை என்று கூறும்பொழுது யாரைப் பார்த்துக் குறை சொல்வது என்பதுதான் பெரும் பிரச்னையாகி விடுகிறது. அந்தப் பிரச்சினையை அலசிப் பார்க்க, பாலும் பாவையும் கதையைச் சிறிது நினைவிற்குக் கொண்டு வந்தால்தான் புரியும். அகல்யா ஒரு கல்லுனி மாணவி. பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவள். கவலை என்றால் என்ன என்பதையே அறியாது வளர்ந்து விட்ட ஒரு அழகுப் பாவை. கலாசாலையில் படிக்கும் பொழுதே, அவளது காதலைப் பெற இளைஞர்கள் இருவர் போட்டியிடடனர். அவளும் அவர்களை வளைய வருகிறாள். அழகால் கவர்ந்த இளவல், தசரத குமாரன் தன்னோடு நெருங்கிப் பழகக் கூச்சப்பட்டதால் அவளை ஒதுக்கி, தன் மன நிலை அறிந்து, இதயத் துடிப்பை எடை போட்டு, இனிய பேச்சால் உறவாடிய இளவல் இந்திரனின் காதலுக்குத் தன்னை உடைமையாக்குகிறாள். சென்னை கலாசாலையிலே வளர்ந்த இந்திரன் - அகல்யாவின் காதலுக்குப் பரீட்சை வைப்பதற்காக கலாசாலை, தன் படிப்பை முடித்துக் கொண்ட அவர்களை வெளியே வாழ்த்தியனுப்பி வைக்கிறது. பெற்றவர்கள் அவர்களது காதல் பரீட்சைக்கு முற்றுப் புள்ளி வைக்கவே, இருவரும் டிக்கட்டு இல்லாத பிரயாணிகளாகத் தம் காதல் பயணத்தைத் தொடங்கி விடுகின்னர். அனுமதியில்லாத பிரயாணத்துக்கு அவசியப்படும்படியான பொருளாதாரம் இல்லாததைக் கண்ட இந்திரன் அகல்யாவைக் காசில்லாமல் காதலிக்க முடியாது என்று கூறி, இடையிலேயே கைவிட்டு விடடுச் செல்கிறான். இந்திரனால் ஏமாற்றப்பட்டு அபலை அகல்யா, தான் திரும்பிச் செல்ல முடியாத பாதையில் வந்து விட்டதை எண்ணி எண்ணி