பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. பரமசிவம் 179 மிகைபடச் சொல்கிற அல்லது காட்டுகிற தன்மையும அவசியம என்பதும் உண்மையே. விந்தன் ஒரு படைப்புக் கலைஞர்தான என்பதை உறுதிப்படுத்தும் சொற்செட்டும் வீரியமும் படிக்கும் போது நம்மைக் கவருகின்றன. பேச்சுத் தமிழைக் கொச்சையாக்காமல் நாசூ க்காகக் கையாளுகிறார். இரண்டே வரிகளில் இயற்கைச் சூழ்நிலையைப் படம் பிடித்துக் காட்டிவிடுகிறார். இரண்டே வார்த்தைகளில் இதயத்தில் ஓடும் ராகச் சாயைகளை உணர்த்திவிடுகிறார். அவர் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டாக எத்தனையோ இடங்களை எடுத்துக் கூறலாம். விந்தனுடைய நடையில் சொற்செட்டோடு ஒரு நையாண்டிக் குரலும் அங்கங்கே ஒலிப்பதைக் கேட்கலாம். அது ஊசி குத்துவது போல் வேண்டிய இடத்தில் நறுக்கென்று குத்துகிறது, தைக்கிறது; சமயத்தில் ஒட்டும் போடுகிறது. இன்றைக்கு ஒகோகோ என்று கொண்டாடும்படி துரக்கிவிட்டுக் கொண்டிருக்கிற சிலருடைய பாணியும் நடையும் இன்னும் பத்தாண்டுகள் போனால் பல்லை இளிக்கும்படி போய்விடும். இதை எங்கே வேண்டுமானாலும் போய் நம்மால் சொல்ல முடியும். காரணம் அவை இன்றையப் போலி வாழ்க்கையை ஆதாரமாகக் கொண்டு அவற்றைக் கலைப் பொருளாகக் காட்டிக் காசாக்க முற்படுகின்றன; போலித்தனங்களைப் பெருமைப்படுத்துகின்றன. இன்றைய வாழ்க்கையின் அடிமட்டப் பிரச்னைகளைத் தொட்டுக் காட்டாமல், அவற்றைப் பற்றிய பிரக்ஞையே இல்லாமல் வேறு எதை எதையோ போட்டு மூடி விட்டு, பம்மாத்துகள் செய்கின்றன. ஆனால் விந்தன் போன்ற கலைஞர்களின் படைப்புகள் சின்னஞ் சிறியவைகளாக இருந்தாலும் இத்தனை நாட்கள் உயிர்த்