பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(5) விந்தனின் அகலிகை - க. கைலாசபதி ஆங்கில மொழியில் outsider என்றொரு சொல்லுண்டு. புறம்பானவர், தொழில் துறை சார்ந்தவரல்லாதவர், தீக்கை பெறாதவர், குழாத்தில் கலந்துறவாடத் தகுதியற்றவர் என்றெல்லாம் அகராதி இச்சொல்லிற்குப் பொருள் கூறும். அரசியலிலிருந்து, இலக்கியம் வரையுள்ள பல துறைகளிலே சிற்சில சமயங்களில் பொதுவாகப் புறம்பானவர் அல்லது திட்சை பெறாதவர் (முறையாகப் பயிற்றப்படாதவர் என்பது பொருள்) எனக் கருதப்படுவோர் திடீரெனப் புகுந்து பாராட்டத்தக்கவற்றைச் செய்வதுண்டு. தகுதி பெற்றவர்கள் தடம் பட்ட வழியிற் சென்று கொண்டிருக்க, இவர்கள் பயிற்சி காரணமான தடையுணர்ச்சி எதுவுமின்றித் துணிவுடன் புதுவது காண்பதுண்டு. தமிழிலே மறுமலர்ச்சி எழுத்தாளர் பலர் வறுமையில் வாடியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள யாவரும் பிறப்பாலும் சமூக அந்தஸ்தாலும் உயர்ந்தவர்களே, ஒரு காலத்தில் பிராமண சமூகத்தவரே பிரபல எழுத்தாளராயும் விளங்கினர். (ஈழத்திலே இப்போக்குக்குப் பல விதிவிலக்குகள் உண்டு). இத்தகைய சூழ்நிலையில், அதிகம் கல்வியின்றி நகரத்திலே உடலுழைப்பாளியாய் வாழ்க்கையைத் தொடங்கி, இலக்கிய ஆர்வத்தினாலும் விடாமுயற்சியாலும் பெயர் வாங்கிய எழுத்தாளர் இருவரைக் குறிப்பிடலாம். இவருள் மூத்தவர் 'விந்தன்' எனப்படும் வி.கோவிந்தன், இயைவர் ஜெயகாந்தன்