பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. பரமசிவம 25 இருவரும் எழுதத் தொடங்கிய பொழுது சமூகத்திலே உள்ள ஏழை எளியவர்கள், தாழ்த்தப்பட்டோர், ஒதுக்கப்பட்டவர்கள், முதலியோரது சுகதுக்கங்களையும் பொதுவாக மனிதனுக்கு மனிதன் செய்யும் அநீதியையும் கொடுமையையும் எடுத்துக் காட்டினர். அச்சுக் கோக்கும் தொழிலாளியாய் இருந்து, பின் பத்திரிகைத் தொழிலிற் புகுந்து, 'கல்கி யில் பத்தாண்டுகள் துணை ஆசிரியராய்ப் பணிபுரிந்து, பின் சுதந்திர எழுத்தாளரான விந்த ன் எழுதிய குறிப்பிடத்தக்க நூல்களில் ஒன்று பாலும் பாவையும். 'பாலும் பாவையும் பல வழிகளிற் குறிப்பிடத்தக்கது. அவற்றுள் ஒன்று அது ஓர் இலக்கியப் பரிசோதனை என்பது. பல படைப்புக்கள், இதிகாசத்திலும் புராணங்களிலும் வழங்கி வரும் அகலிகை கதையை எடுத்துச் சிறுநிற மாற்றங்கள் செய்து புதுவிளக்கம் கூறியுள்ளன. ஆனாலும் பாலும் பாவையும் தற்காலச் சமூகக் கதையொன்றாகும். இந்திரன், அகல்யா, தசரதகுமாரன் என்பன இதில் வரும் மூன்று பாத்திரங்களுக்குரிய பெயர்கள் என்பதைத்தவிர பழைய அகலிகை கதைக்கும் இதற்கும் தொடர்பு எதுவும் இல்லை. கனகலிங்கம், ராதாமணி, சியாமளா, பரமசிவம் முதலிய வேறு பாத்திரங்களும் நாவலில் வருகின்றனர். பழைய புராணக் கதையைத் தெரியாத ஒருவர் இதனை அசல் சமூகக் கதையாகவே படித்து விடுவார். ஆனால் பழைய அகலிகை கதை தெரிந்தவர்க்கு, இந்நாவலின் பொருள் ஆழம் நிறைந்ததாயும் நூதனமானதாயும் இருக்கும். இதனைச் சிறிது விளக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இதர படைப்புக்களிலே அகலிகை, கெளதமர் முதலானோர் பெளராணிக உலகிலேயே நடமாடுகின்றனர் சாபம், கல்லாதல் முதலிய இயற்கையிகந்த நிகழ்ச்சிகளும் இந்திரன் தேவர்கள் முதலிய தெய்வப்பிறவிகளும் இடம்பெறுவதால் அவை சமகால உலகத்தைச் சார்ந்தனவாக அன்றிக் காலங்கடந்த காலத்தே கான கமொன்றில் நடந்த நிகழ்ச்சிகளோடு தொடர்புடையவாயுள்ளன அதனால், எமது எழுத்தாளர்கள் எத்துணைச் சமகால நோக்குடன் எழுதினாலும், அப்படைப்புக்களில் வரும்