பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 விந்தன் இலக்கியத் தடம் "அவனைக் கண்டதும் எந்தவிதமான உணர்ச்சியையும் வெளியே காட்டிக் கொள்ளாமல், நீங்களா என்றாள் அவள் தலையைக் கீழே குனிந்துகொண்டே. "ஆமாம்! நான்தான் என்று சொல்லிக் கொண்டே தசரத குமாரன் முதன் முறையாகத் துணிந்து அவளைக் கைகொடுத்துத் துக்கினான். இரு வரும் தனிமையை நாடிக் கடற்கரைக்குச் சென்றார்கள்.” இதிகாசக் காட்சிகளையும் தற்காலச் சம்பவங்களையும் ஒன்று கலந்து வேடிக்கை காட்டுகிறார் ஆசிரியர். அகலிகை சாப விமோசனம் இராமாயணத்திலே சிறியதொரு நிகழ்ச்சியாயினும், இராமனைப் பொறுத்த வரையில் அவன் பெருமைக்கு எடுத்துக்காட்டாய் இலங்குவது. 'கண்ட கல்மிசைக் காகுத்தன் கழல் துகள் கதுவ பண்டை வண்ணமாய் அகலிகை நின்றாள் என்பார் கம்பர்; "கான் உற்ற காகுத்தன் கால் படலும், ஆங்கொரு கல், மான் ஒத்த கண்ணனங்காய் மாறுவதாக வெள்ளக்கால் பாடுவார்; "துன்பம் துடைக்கும் இராம ரது தூய திருவடித்துகள் பட்டதுமே, கல்லிலிருந்து அத்தவப் பெண்ணாகிய அகலிகை வெளிப்பட்டாள் என்பார் துளசிதாசர். இத்தனை மகத்துவம் வாய்ந்த காட்சியை, அற்புதமான நகைச்சுவையுடன் கையாண்டிருக்கிறார் விந்தன். அகலிகைக்கு மறுபடியும் புதிய வாழ்வைக் கொடுக்க வந்த தெய்விகப் புருஷன் காலில் விழுந்து நமஸ்கரிக்கிறாள் அகலிகை என்கிறார் புதுமைப்பித்தன். இங்கே பயந்தவனான தசரதகுமாரன், மன்னியுங்கள் என்று பல்லை இளித்துக்கொண்டுதான் எழுந்து நிற்கிறான். இராமன் கால்துகள் கதுவச் சாப விமோசனம் பெற்ற அகலிகை எங்கே, கையாலாகாதவனான தசரதகுமாரன் வந்து முட்டி மோதிக்கொள்ளும் அகல்யா எங்கே?