பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. பரமசிவம் 35 இரண்டு காட்சிகளுக்கும் உள்ள மாறுபட்ட தன்மை தொனி விசேஷம் நிறைந்தது. கோதண்டம், லக்ஷ்மணன் முதலிய சொற்கள் நவீன தசரத குமாரனுக்குப் புதிய அர்த்தத்தைப் பெய்கின்றன. கோதண்டமேந்திக் குவலயத்தைக் காக்க வந்த ரகு வீரனே அன்று அகலிகைக்கு விமோசனம் அளித்தான். இங்கோ சலன புத்திக்காரனான தசரதகுமாரன் தனது மார்பை அழுத்திப் பிடித்துக் கொள்ளும் நோஞ்சலன், பேமானி. அதே சமயத்தில் பாலும் பாவையில் வரும் தசரத குமாரனுக்கும் இராமாயண நாயகனுக்கும் ஒப்புமை இல்லாமலுமில்லை. அதை உய்த்து உணர வைத்துள்ள விந்தனது இலக்கியத் திறன் குறிப்பிடத்தக்கது. தசரத குமாரன் தயங்கித் தயங்கி அகல்யாவைத் தன் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறான். “ரொம்ப நேரங் கழித்து வந்திருக்கிறீர்களே! பால் கெட்டு போய்விட்டதே' என்று சொல்லிக் கொண்டு வருகிறான் சமையற்காரன். அகல்யாவுக்குத் தான் மூன்றாவது ஆசாமி என்று பிறர் கருதக்கூடும் என்பது அவனது உள்மனக் கவலை. அம்மன நிலையில், சரி கெட்டுப் போன பாலை என்ன செய்யப் போகிறாய்? என்று கேட்டு வைத்தான். சமையற் காரனது பதில் தசரத குமாரனது முடிவைத் தீர்மானிப்பதாயிருந்தது. ‘என்ன ஸார் இது? - கெட்டுப்போன பாலை என்ன செய்யப் போகிறாய்” என்று காலேஜ் ஸ்டூடென்ஸ் கேட்கிற மாதிரி கேட்கிறீர்களே! எங்கேயாவது கெட்ட பால் நல்ல பாலாகுமா எஸ்ார்? எடுத்துச் சாக்கடையிலே கொட்டவேண்டியது தானே!, என்றான் சமையற்காரன். குற்றமற்ற இக்கூற்றைக் குத்தல் பேச்சாகக் கருதிய தசரத குமாரனுக்குச் சுருக்கென்றது. அடுத்த செயலாகக் கெட்ட பாலாகிய அகல்யாவைச் சாக்கடைக்கே தள்ளிவிடுகிறான்.