பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 விந்தன் இலக்கியத் தடம் இதைப் படிக்கும்பொழுது தொனி விசேஷத்தால் எமக்கு இராமன் சீதையுடன் நடந்து கொண்ட விதம் நினைவில் தோன்றுகிறதல்லவா? இராவண வதத்தின் முடிவில், யுத்த பூமியிலே அக்கினிப் பரீட்சை வைத்ததே இராமனுக்குப் பெரும் இழுக்கு. அதன் பின்னரும் அயோத்தியில் பொறுப்பற்றவர்களின் வீனுரையைக் கேட்டு, இராமன் சீதையைக் காட்டுக்கு அனுப்பிவிட்டான் என்று உத்தரகாண்டம் கூறும். இராமன் வண்ணானின் மொழி கேட்டு வனம் விடுத்த சீதை' என்று ஈழநாட்டுப் புலவர் ஒருவர் பாடியிருக்கிறார். 'வண்னான் சொன்னதைக் கருத்திற் கொண்டு வைதேகியை வனத்துக்கு அனுப்பிவிடும் விஷ்ணு அவதாரமாம் இராமனுக்கும், சமையற்காரன் வார்த்தைகளைக் கருத்திற் கொண்டு அகல்யாவைக் கரகரவென்று இழுத்துக் கொண்டு போய் வீட்டை விட்டுத் துரத்திவிடும் தசரத குமாரனுக்கும் என்ன வித்தியாசமிருக்கிறது? ஒன்றுமே யில்லை. காவியத்திலும், நாவலிலும் ஆண் திமிர் ஒன்றுதான். ‘எல்லாம் ஈசுவர லீலை என்று நன்மைக்கும் தீமைக்கும் பேதம் பாராட்டாமல் சமாதானம் கூறும் ராஜாஜியே இராமாயணத்தில் இராமன் பற்றிய இக்கதைக்குப் பெரிதும் முயன்று விளக்கம் கூறுகிறார். இராமன் சீதையைக் காட்டுக்கு அனுப்பியதாகக் கூறும் பழங்கதை பாமரர்களிடையில் வழங்கியதொன்று என்று அதன் முக்கியத்துவத்தைக் குறைக்க முயன்று விட்டு, "இந்தத் துயரக் கதை நம்முடைய தேசத்துப் பெண்மணிகளின் கடல்போன்ற துக்கத்தில் தானாக உதித்த ஒரு கற்பனை. இந்தப் பரீட்சை என் புத்தியில் ராமனுடைய குணத்துக்கு அவ்வளவு பொருத்தமாக இல்லை. படிக்கும்போது கஷ்டமாக இருக்கிறது. துன்பம் என்ன! இன்பம் என்ன! - எல்லாம் ஈசுவரலtலை.” இராமாயணத்திலே அறத்தின் நாயகன் நடாத்திய அக்கினிப் பிரவேசம் முதலியவற்றைப் படிக்கும் போது மனத்துக்குக் கஷ்டமாக இருக்கிறது என்று ராஜாஜி கூறுவது போலவே விந்தனின் கதைகள் பற்றிக் கூறியிருக்கிறார் கல்கி அவர் சொன்னார் :