பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 விந்தன் இலக்கியத் தடம் விந்தனுடைய சிறுகதைகளையோ பாலும் பாவையும் நாவலையோ ஆராயும்பொழுது, மேற்குறிப்பிட்ட இரண்டையும் பற்றி எழுதும் பொழுதே அவரது முழு இலக்கியத் திறனும் வெளிவந்துள்ளது என்பதும் தெரியவரும். இந்த அமிசங்களை முனைப்புடன் சித்திரிக்கத்தக்க அங்கத உணர்வும், அதற்கான நடையாட்சியும் அவளிடமிருந்தன. நோக்கும் ஆற்றலும் காரண காரியத் தொடர்பாய் இணைந்திருந்தமையால் இலக்கியச் சுவை தானாகவே தெரிய நின்றது. ஆனால் விந்தனிடத்திருந்த வேறு சில இயல்புகள் மேலே எடுத்துக் கூறப்பட்ட இயல்புகளின் தர்க்கரீதியான மலர்ச்சிக்கு இடம் கொடுக்கவில்லை. அந்த இயல்புகள் யாவை? வித்தனின் வாழ்க்கை வரலாறு பற்றிய தெளிவான தகவல்கள் எதுவும் இலக்கிய உலகுக்குத் தரப்படாத இன்றைய நிலையில், விந்ததுை வாழ்க்கைச் சம்பவங்களை மாத்திரம் ஆதாரமாகக் கொண்டு பின்வரும் இரு இயல்புகளை முக்கியமானவையெனக் கூறலாம். 1. தனது அறிவுணர்வினாற் சரியென்று கொண்டவற்றினை நடைமுறைப் படுத்தும் எந்த ஒரு இயக்கத்திலும் நிலையாக நிற்காமை. 2. தனது அறிவுணர்வினாற் சரியெனக் கொண்டவற்றிற்கு முரணாக இலக்கிய நிறுவனங்களிற் கடமையாற்றியமை. இந்த இயல்புகள் காரணமாக அவரது திறமைகள் பூரணமாக வளர்க்கப்படவில்லை. மேலும் வாழ்க்கை வாய்ப்பு அதிக மற்ற சூழலிலே தோன்றியமையால் தமது சமூக நிலைப்பாட்டினை அறிவு பூர்வமாக விளங்கிக் கொள்வதற்கும் மேலே வளர்த்தெடுப்பதற்குமான கல்விப் பிண்ணணியும் அவரிடத்திருக்கவில்லை. புதுமைப் பித்தனிடத்தும் சுயேச்சையான போக்குக் காணப்பட்டது உண்மைதான். புதுமைப்பித்தனிடத்தும் நம்பிக்கைவரட்சி காணப்பட்டதுண்மைதான். புதுமைப்பித்தனும் விந்தனும் தங்கள் சாதனைகளை முற்று முழுதாக நிலைநாட்டும் (தவறான) நோக்குடன் சினிமாவுக்குட் புகுந்தவர்கள்.