பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 விந்தன் இலக்கியத் தடம் கல்கி பத்திரிகை அவர் வளர்ச்சிக்கு ஏற்ற நாற்றங்காலாக அமைந்தது. அதிலேயே அவர் சிறு கதைகளும் எழுத முற்பட்டார். கல்கியில் வெளி வந்த அவர் கதைகள் தொகுக்கப் பெற்று முல்லைக் கொடியாள் என்ற பெயரில் நூலாகவும் வெளி வந்தது. தமிழ் வளர்ச்சிக் கழகத்தாரின் முதற்பரிசைப் பெற்றது. அவருடைய அந்த முதல் சிறுகதைத் தொகுப்பு. மேல் மட்டத்தாரையும் நடுத்தர வர்க்கத்தாரையும் விட்டு விட்டு ஏழை எளிய மக்களின் வாழ்க்கைப் பிரச்னைகளைத் தம் கதைகளுக்குக் கருவாகக் கொண்டிருந்தார் விந்தன். பெரும்பாலான வாசகர் கூட்டத்தை அவர் கவர்ந்ததற்கு முக்கியமான காரணம், கதைமாந்தர்கள் மற்ற எழுத்தாளர்களின் نمات: سا 632 تھf{iٹ6 نتیے மாந்தர்களிலிருந்து வேறுபட்டதே ஆகும். இடைக் காலத்தில் மனிதன் என்று ஒரு பத்திரிகை நடத்தினார், மற்றவர்களால் புறக்கணிக்கப்பட்ட அடி மட்டத்து மக்களின் குரலாக அது ஒலிக்கத் தொடங்கியது. பொருளாதாரச் சுரண்டலாலும் சமூக ஏற்றத் தாழ்வாலும் அவதிப்படும் மக்களுக்குப் பரிந்து பேசும் வலிமை மிக்க கருவியாக மனிதன் விளங்கியது. ஆனால் வெறும் எழுத்தாற்றலையும் ஆர்வத்தையும் மட்டும் வைத்துக் கொண்டு பத்திரிகை நடத்த முடியுமா? பெரிய முதலீடு, இயந்திர வசதி, விளம்பர வாய்ப்பு, விற்பனைக்கான வழிமுறைகள் முதலியவற்றைக் கொண்டிருந்த தமிழ்ப் பத்திரிகை உலகோடு போட்டியிட்டு அவரால் வெற்றி பெற முடியவில்லை. கடைசியில் அவர் தினமணி கதிர் பத்திரிகையில் சேர்ந்து பணியாற்றினார். அந்தக் காலத்தில் அவருடைய எழுத்துக்கள் - சிறுகதைகள், நாவல்கள் முதலியவை - மிகுதியாக வெளிவரவில்லை. என்றாலும் ஓரளவு பொருளாதாரப் பாதுகாப்புடன் அவர் வாழ்வதற்கு அந்த வேலை துணை புரிந்திருக்க வேண்டும். இன்று திரு. விந்தன் நம்மிடையே இல்லை. அவருடைய எழுத்துக்கள் இருக்கின்றன. அவற்றைப் பதிப்பித்து மக்களிடையே பரவச் செய்வதுதான் அவர் நினைவுக்கு நாம் செலுத்தும் சிறந்த அஞ்சலியாகும். 1982