பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு மதிப்பீடு - எஸ். தோத்தாத்ரி எம்.ஏ. கோரிக்கை யற்றுக் கிடக்கு தண்ணே இங்கு வேரிற் பழுத்த பலா என்றார் பாரதிதாசன். இந்த நிலை விந்தனுக்கு பொருத்தம். ஏனென்றால் இலக்கிய விமர்சகர்களின் கடைக்கண் பார்வைக்கு இலக்காகாத சிறுகதை ஆசிரியர்களுள் விந்தனும் ஒருவர். 1926ல் தோன்றி 1975ல் மறைந்தவர் வித்தன். சென்னையிலேயே முழுக்கவும் வாழ்நாளைக் கழித்தவர். ஒரு தொழிலாளக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். அவர் மனிதன் என்ற பத்திரிகையை நடத்தியவர். கல்கி, விகடன் ஆகிய இதழ்களில் பல சிறுகதைகளை எழுதியுள்ளார். அவருடைய சிறுகதைகள் என்று இன்று தொகுப்புகள் மூலமாகக் கிடைக்கக் கூடியவை சுமார் 115 கதைகள் உள்ளன. இவற்றை விந்தன் காலச் சூழ்நிலைகளில் (எ) கண்டு ஆராய்ந்து எந்தெந்தப் போக்கு (பி)களை இவை பெற்றிருக்கின்றன என்பதைக் காண்பதே இக்கட்டுரையில் மேற்கொள்ளப்படுகிறது. விந்தன் வாழ்ந்த காலம் என்பது தமிழ் நாட்டில் பல மாறுதல்கள் நிகழ்ந்து கொண்டிருந்த காலம். விந்தன் பிறந்த ஆண்டான 1916ல் தொடங்கி, அவர் மறைந்த ஆண்டான 1975 வரையுள்ள காலகட்டத்தின் சமூகப் போக்கினை நாம் நன்கு அறிவோம். சர்வதேச ரீதியில் முதலாளித்துவம் அதன் உச்சக்கட்டமான ஏகாதிடத்தியத்தை அடைந்த காலம் இது. முதலாளித்துவ சமூக அமைப்பில் பலம் குன்றிய இடத்தில் சோஷலிசப் புரட்சி தோன்றிய காலம் இது. அது வெற்றி பெற்று ஒரு