பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 விந்தன் இலக்கியத் தடம் பலம் பொருந்திய முதலாளித்துவ எதிர்ப்பு அணி உருவான காலமும் இதுவே. இந்தக் காலத்தில் முதலாளித்துவம் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக, பல நாடுகள் அவதிக்குள்ளாயின; இவற்றின் விளைவாகப் போரும் வாணிபப் போட்டியும் அதிகரித்தன. உலக அமைதி பல இராணுவ முகாம்கள் என்ற கொள்ளிவாய்ப் பிசாசுகளினால் சூழப்பட்டிருந்தது. இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில், ஏகாதிபத்தியம், காலனி ஆதிக்கம் என்ற அவதாரம் எடுத்து ராமராஜ்யம் நடத்தியபடியால், இங்கு விடுதலைப் போராட்டம் மிகவும் தீவிரமடைந்தது. காந்தியடிகளின் நாடு தழுவிய சத்தியாக்கிரகப் போராட்டம், திலகர் இந்தியச் சட்டம், தீவிர காங்கிரஸ் இயக்கம், 1942 ஆகஸ்ட் போராட்டம், கிரிப்ஸ் தூது கோஷ்டி என்ற பல்வேறு வடிவங்களில் அந்நிய எதிர்ப்புப் போராட்டம் நிகழ்ந்து கொண்டிருந்தது. இந்தப் போராட்டத்தில் இந்திய உழைக்கும் மக்கள் தீவிரமான பங்கு பெற்றனர். அவர்கள் அதிகமாகப் பங்கு பெற பங்கு பெறத்தான் தேச விடுதலை இயக்கத்தின் வீச்சும், வலிவும் அதிகரித்தது. இந்தச் சக்திகளின் செயல்கள். இந்தியாவிற்கு விடுதலையைப் பெற்றுத் தந்தன என்பதில் ஐயமில்லை. விடுதலை பெற்ற பின்பு உள்ள பாரதம் என்பது நிர்மானத் திட்டங்களில் முதலாளித்துவத்தையும், சோஷலிசத்தையும் ஒன்றாக்கிய ஒரு மூன்றாம் வழியை மேற்கொண்டு வருகிறது. எனவே தற்பொழுதைய இந்தியாவின் பிரச்னைகள் என்பவை, இந்த இரண்டில் எதற்கு அதிக அழுத்தம் கொடுப்பது என்பதுதான். இந்தக் காலப் பகுதியை சமூக இயல் அடிப்படையில் காணும்பொழுது வர்க்க முரண்பாடுகள் தீவிரமான காலம் என்று கூறலாம். இந்த முரண்பாடுகள் தமிழகத்திலும் தீவிரம் பெற்று விளங்குகின்றன. இவற்றைத் தமிழ்ச் சிறுகதை ஆசிரியர்கள் எந்த அளவிற்குச் சுவீகரித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதைக் காணும் பொழுது விந்தனின் ஸ்தானம் நமக்குத் தெளிவாக விளங்கிவிடும். இந்த முரண்பாடுகளைப் பிரதிபலித்து என்ற அடிப்படையில் அணுகினால். இவை இருப்பதாகவே காட்டிக் கொள்ளாத