பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு யோசனை - 47 செய்வார்தள் என்று வருந்துகிருேம். இப்படியே இது சம்பந்தமான விஷயங்களில் எல்லாம் வண்டிக்கு முன் குதிரை பூட்டாமல், குதிரைக்கு முன் வண்டியைப் பூட்டி வருகிருேம். அப்படிச் செய்தால் வண்டி நகருமா, குறித்த இட்ம் போய்ச் சேருமா, அல்லது குடைதான் கவிழுமா? ஆண் ஜனனேந்திரியம் ஆண் ஜனனேந்திரியத்தில் முக்கியமான பாகங்கள் விந்து ஊறும் பீஜங்கள், விந்து ஏறும் குழாய்கள், விந்துதங்கும் பைகள், பிராஸ்டேட் கோளங்கள், ஆண்குறி என்பன வாகும். பீஜங்கள்:- தொடைகளுக்கிடையே தொங்கும் தோற் பையில் முட்டை வடிவமான இரண்டு பீஜங்கள் உள. அவற்றில் வ்வொன்றிலும் இரண்டு அடி நீளமுள்ள சுமார் 400 மெல்லிய கிழாய்கள் சுருண்டு கிடக்கின்றன. அவைகளிலேயே இரத்தத்திலிருந்து விந்தும் கர்ப்பமுண் டாக்கும் சுக்கில உயிர்களும் வாலிபப்பருவம் முதல் மரண மடையும்வரை இடைவிடாமல் உண்டாய்க் கொண்டிருக் கின்றன. விந்து:-இளநீர் வழுக்கைபோல் வெள்ளையாயும் பிசின் போலவும் இருக்கும். அது வெளியானதும் கட்டிய யும், சில நிமிஷங்க்ளுக்குப் பின் நீர்த்ததாயும், அதன் பின் சிறிது நேர்த்தில் பிசின்போல் ஒட்டுவதாயும் இருக்கும். ஒவ்வொரு தடவையும் ஒரு தேக்கரண்டி அளவு வெளியாகும். சுக்கில உயிர்கள்:-ஒரு முறை வெளியாகும் விந்தில் சுமார் 30 கோடி சுக்கில் உயிர்கள் இருக்கும். ஒர் ஊசி முனையில் உள்ள விந்தைப் பூதக்கண்ணடி மூலம் பார்த்தால் ஆயிரக்கணக்கான உயிர்கள் கூட்டங் கூட்டமாக நெளிந்து கொண்டிருப்பதைக் காணலாம். ஆண்மகன் வாலிபனுகு முன் உன்டாகும் விந்தில் சுக்கில உயிர்கள் காணப்ப்ட்ா. வாலிபய்ை விட்டாலும் நிச்சயமாகக் காணப்படும் என்று கூற முடியாது. சில மருந்துகள் சாப்பிடுவதாலும் அவைகளின் உற்பத்தி