பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி : 28 காலம் : மாலை. இடம் : சோணு சலம் வீடு. நிகழ்ச்சி : சோளுசலம், தன்னை ஆதரிக்கும்படி வாலிபன் கந்தசாமியை வற்புறுத்துதல். பாத்திரங்கள் : சோளுசலம், கந்தசாமி, சத்தியாபிள்ளை கத்தியா பிள்ளை, உத்தியா பிள்ளை. கந்தசாமி : வணக்கமய்யா. என்னை வரச் சொன்னிர் களாமே? சோணுசலம் : ஆமா. வரச் சொன்னேன். இப்பத்தான் வக் திருக்கே. ஆமா நீ எங்களுக்கு ஆதரவா இருக் கனும்பா. கந்த என் ஆதரவு உங்களுக்கு எதுக்குங்க? நான் ஏழை! நீங்க பெரிய பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த வங்க. சோணு : ஆ...ங்...ங்...அப்படிச் சொல்லக் கூடாது. எனக்கு உங்க தாத்தாவைத் தெரியும்; அப்பாவைத் தெரியும்; மாமாவைத் தெரியும்; மாமியைத் தெரியும். எவ்வளவு காணயமான குடும்பம். உங்க மாமா மணியான பொருளையெல்லாம் தானம் பண்ணினுரு. உங்கப்பா, சுதந்திரம், தேசம்னு உயிரையே விட்ட வர். பாவம் நீயோ!.,,