பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 வீர சுதந்திரம் ஆஷ்: (புலிபோல் உறுமி) உம், கலெக்டர் என்கிற மதிப்பு கொஞ்சம்கூட இல்லையே. நோ ரெஸ்பெக்ட், நோ ரெஸ்பெக்ட். சிவா : ஒய் உம்மை மனிதரென்று மதித்ததால்தான் உமது அழைப்புக்கு மரியாதை கொடுத்து இங்கு வந்திருக்கிருேம். - விஞ்ச் : ஹ- இஸ் திஸ் மேன்? யார் இந்தப் பரதேசி: ஒ. . . . ஒ. . .-- இந்தப் பரதேசி மேன் பேர்தான்...... வ. உ. சி. . ஒய் யாரைப் பார்த்துப் பரதேசி என்கிருய்? இங்கு குடியேறிய பிற நாட்டானுக்குத்தான் பர தேசி என்று பெயர் இவர் எங்கள் சுதேசி இயக்கத் தின் தலைவர். பாரதத்தின் வீரப்புதல்வர்களில் ஒருவர்! பெயர் சுப்ரமணிய சிவம். - விஞ்ச் : ஒ என்ன மேன் மிஸ்டர் சுப்ரமணிய சவம்? வ. உ. சி : என்ன? சிவா : மன்னித்து விடுங்கள் பிள்ளைவாள்! பாவம் தமிழ் அறியாதவன் ஒய், சவம் என்ருல் செத்த பிணம் என்று அர்த்தம். நான் ஜீவனுள்ள சிவ மய்யா, சிவம்: விஞ்ச் : ஒ.ஐ.சீ. சாரி மிஸ்டர் சவம் என்ன மேன் நீங்க போற இடமொல்லாம் ஒரே ரகளை இருக்குது, கலகம் இருக்குது, நீதானே வீ ர சு. த ந தி ர ம் வேனும்னு வீதியெல்லாம் பாடினே? வ. உ. சி. ஆம் பாடினர். பாடுவார். பாடவைப்பார்!