பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 வெற்றிமேல் வெற்றி பெற.

உன்னைச் சுற்றியுள்ள இருள் எல்லாம் தன்னலப் பற்றி னால் தூண்டப் பெற்றதே;

ான் னிடம் இருளே இல்லை. உண்மை புனிதமானது; துயர் அற்றது;

விம்மலும், சோர்வும் கதறி அழுகையும் உண்மையில் இல்லை.

இப்போதுகூட, உனக்குத் தெரியாவிட்டாலும், உனது வழியில் எல்லாம் எனது ஒளி மிளிர்கிறது;

ஆனால், நீ காண்பதெல்லாம் உலகியல் தன்னலத்தின் இருளான மாயத்தோற்றம் மட்டுமே.

விடாது முன்னேறிச் சென்று, உண்மையைப் பற்றி மட்டுமே சிந்தித்துக்கொன்;

நீ பின்னடைந்தோ, உனது தூய்மையான முடிவின் ருந்தோ உனது மனத்தை விலக்கி விடாதே;

நீ உறுதி பூண்டிருக்கும் அன்பு வெற்றியானது; தன்னலத்தை வெற்றி கொள்வதைவிட மிகப் பெருமை வாய்ந்தது;

நம்பிக்கை வை, வெற்றி கொள்வாய். மாணவன் : ஒ ஆண்டகையே! என்னைப் பற்றிக் கொண்டிருக்கும் இருளானது வலிமை மிக்கது, எனவே என்னைத் தாங்களே வழி நடத்துங்கள்.

தன்னல எண்ணக் கருமுகில்கள் என்னைச் சூழ்ந்து கொண்டுள்ளன.

என் மனத்தேயுள்ள பகைவர்கள் தொடர்ந்து, என்னைத் தாக்கிக் கொண்டேயிருக்கின்றனர்

என் சூழ்ச்சியில் பின்னப்பட்ட வலையில் என் கால்கள் சிக்கிக் கொண்டுள்ளன.