பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனது கார் பரம்பரையாய் வந்தது என்று என் பெற்றேர் கூறக் கேட்டிருக்கிறேன். அதனால் என் சந்ததி யார்களும் இதை அனுபவிப்பர். இதை நான் விற்க முடியாது. என் கடன்காரர். இதை ஜப்தி செய்ய இயலாது ; அரசாங்கத்தாரும் அணுகார். எனது காரின் விஸ்தீரணம் எவ்வளவு, தெரி யுமா ? இங்கிலாந்து முதலான மேடுைகளில், உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்க நாற்காலிகள், சாய்வு நாற்காலிகள் போட்ட ஹால், மேஜை முதலியன உள்ள போஜனசாலை, உறங்கு வதற்குக் கட்டில்களிட்ட இடம், சமையல் அறை ஸ்கான அறை முதலியன எல்லாம் அமைக்கப் பெற்ற பெரிய மோட்டார்கள் தயாரிப்பதாகக் கேள்வி. ஆல்ை, அதைக் கேட்டு அற்புதம் அற்புதம் என்று ஆச்சரியப்படத் தேவையில்லை. என் . காரோடு ஒப்பிட்டால் அவைகள் எல்லாம் காற்றில் மிதக்கும் தாசியினும் சிறியவை. என் காரின் நீளம் இருபத்தையாயிரம் மைல், அகலமும் அதே அளவுதான். இவ்வளவு பெரிய காரைப்பற்றி - காணவேண்டாம், கேட்க வேண் டாம், - என்றேனும் கனவாவது கண்டிருக்கிறீர் களா ? நீளத்தின் அளவே அகலம் என்று கூறிய தால் சதுரம் என்று எண்ணிவிட வேண்டாம். என் கார் எல்லா அம்சங்களிலும் அபூர்வமானதா புருக்க வேண்டாமோ ? மனிதர்கள் செய்யும் கார் 15