பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெற்றிக்கு எட்டு வழிகள்

 138


சூறாவளி சூழ்ந்த கடலின்கண் நெடுநாள் அலைந்து திரிந்த பின்னர் அடிமையொழித்த உயிர்கள் சென்றடையும் அமைதியான துறைமுகம் அதுவேயாகும். மிகுதியாகத் துன்புற்று, மிகுதியாகப் பொறுமையுடனிருந்து முடிவில் வெற்றியும் கண்ட மனிதனை அது அடையாளப்படுத்தி வைக்கின்றது.

அமைதி இல்லத மனிதன் நடுநிலையுடைய மனிதனாக இருக்கவியலாது. பரபரப்பு, தப்பெண்ணம், ஒருதலைச் சார்பு ஆகியவை அமைதிகுலைந்த இச்சைகளினின்றுமே தோன்றுகின்றன.

அமைதி சூழ்ந்த, நடுநிலையுடைய மனிதன் மகிழ்ச்கிரமான மனிதன் மட்டுமன்று; அவன் தன்னுடைய ஆற்றல்கள் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பவனுமாவன். அவன் உறுதியானவன், முன்னோக்குடையவன்; செயல் திறமைக்கு உகந்தவன். எளிதில் சினங்கெள்கின்ற மனிதன் தனது கூச்சலின் மூலம் மெதுவாகவும், கடினப் பாட்டுடனும் செய்து முடிப்பதை அவன் விரைவிலும் எளிதாகவும் மெளனமாகச் செய்து முடித்து விடுகின்றான். அவனுடைய மனம் தூய்மைப் படுத்தப் பட்டதாக, சமநிலையுடையதாக, ஒருமுகப் படுத்தப்பட்டதாக விருக்கின்றது. கொடுக்கப்படுகின்ற வேலையைக் குறைபாடில்லா ஆற்றலுடன் செய்து முடிக்கப் பணிக்கும் ஏவலை ஏற்க அவன் எக்கணமும் அணியமாயிருக்கிறான். அமைதியான மனத்தில் இச்சைகள் அனைத்தும் தணிவுறுகின்றன. முரண்பாடுகள் அனைத்தும் இசைவிணக்கம் பெறுகின்றன. எதிர் மறைகள் அனைத்தும் பொருத்தம் பெறுகின்றன. அங்கு