பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெற்றிக்கு எட்டு வழிகள்

 142



தன்னம்பிக்கை

தன்னம்பிக்கை பற்றிய எமர்சனின் கட்டுரையை ஒவ்வோர் இளைஞனும் படித்தாக வேண்டும். இதுவரை எழுதப் பெற்றவற்றில் ஆண்மையும் வீரமும் செறிந்த கட்டுரை அதுவேயாகும். அது, வாலிபர்களிடையே காணப்படுகின்ற தன்னைத் தானே குறைவாக மதிப்பிடுதல், தன் இறுமாப்பு என்னும் இருமனப் பிணிகளையும் ஒருங்கே குணப்படுத்துவதற்கெனத் திட்டஞ் செய்யப்பட்டது. நாணமுடையவனுக்கு அவனுடைய தயக்கத்தின் வலுவின்மையையும், பயனின்மையையும் அது எடுத்துக் காட்டுகிறது. தருக்குடையவனுக்கு அவனுடைய செருக்கின் சிறுமையையும், வெறுமையையும் அது புலப்படுத்துவதாகவே இருக்கும். இது வீறுமிக்க விழுப்பத்தின் புதிய புலப்பாடு, பண்டைய திருப்பார்வையுடையோனுக்கு அருள் பாலித்த புலப்பாடு போன்றது.

தன்னம்பிக்கைத் தற்செருக்கெனத் தவறுதலாகப் புரிந்து கொள்ளக்கூடாது. ஏனெனின், ஒன்று எத்துணை உயர்வானதாகவும், மேம்பாடுடையதாகவும் இருக்கின்றதோ, அத்துணை தாழ்வானதாகவும், பயனற்றதாகவும்