பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

39

ஜேம்ஸ் ஆலன்



சிக்கனம்

இயற்கை அன்னை வெறுமையை அறியமாட்டாள். விரயமும் அவள் அறியமாட்டாள். இயற்கையின் சிக்கனத்தில் ஒவ்வொன்றும் பேணிக் காக்கப்பட்டு நற்பணிக்காகத் திருப்பப்படுகின்றது. உடலின் கழிவுப் பொருள்கள் கூட வேதியமுறையில் உருமாற்றப் பெற்றுப் புது உருவங்களைக் கட்டுதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இயற்கை ஒவ்வொரு கழிவையும் அழிப்பதென்பது அதை ஒழித்துவிடுவதன்று. ஆனால், உருமாற்றுகையின் மூலமே அதைச் செய்கின்றது. அதாவது, அதைப் பண்படுத்தித் தூய்மைப்படுத்தி அழகுள்ள, பயனுள்ள, நன்மையுள்ள செயலுக்குப் பயன்படும் வண்ணமே அதைச் செய்கின்றது.

இயற்கையில் உலகியல் முறையாக இருக்கின்ற அதே சிக்கனம், மனிதனிடத்தில் ஒழுக்கநெறிப் பண்பாக இருக்கின்றது; அவன் அப் பண்பைக் கொண்டே தன்னுடைய ஆற்றல்களைப் பாதுகாத்துச் செயல்களின் அமைப்பின் மூலம் ஓர் இயக்க உறுப்பாக தன்னைக் கொள்கின்றான்.

செல்வநிலைச் சிக்கனம் வாழ்க்கை முறையின் ஒரு சிறு பகுதியேயாகும். முழுக்கவும் மனஞ் சார்ந்ததாகவும், அதன் உருமாற்றங்கள் உயிரியல் சார்ந்ததாகவும்