பக்கம்:வெளிநாட்டு விடுகதைகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35

பிலிப்பைன்ஸ்


134. பிள்ளைக்கு வால் உண்டு;
பெற்றோர்க்கு வால் இல்லை.

135. "என்னைச் சுமந்தால்
உன்னைச் சுமப்பேன்."
- எவர் சொன்ன சொல் இது?

136. கால் இல்லை; தாவுவான்.
வாய் இல்லை; கத்துவான், அவன் யார்?

137. திறந்து திறந்து மூடினாலும்

சிறிதும் ஓசை கேட்காது.

ஜாவா


138. நாலு கால் உண்டு ;
நடக்கத் தெரியாது.

139. வெள்ளைப் பெட்டியில்
வெள்ளியும் தங்கமும்.

140. உச்சியிலே கிரீடம்;
அவள்
உடம்பெல்லாம் கண்.

141. இரண்டு நண்பர்கள்
எப்போதும் சேர்ந்திருப்பர்.
ஒருவர் முன்னால் போனால்,

மற்றவர் பின்னால் போவார்.