பக்கம்:வெளிநாட்டு விடுகதைகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37


149. நீரிலே வாழும்; மீன் அல்ல.
கொம்புமே உண்டு; மாடல்ல.

150. தன் தலையைத் தானே விழுங்கும் '

பிராணி எது?

பர்மா


151. வெளுக்காத போர்வை;
வெள்ளையா யிருக்கும்.
நிரப்பாத குடம்;
நிறைந்தே இருக்கும்.

152. மெதுவாய்த் துடுப்பு நான்கு தள்ளிவர,
விதானத்துள் சீமாட்டி. அமர்ந்துவர.

153. நாணல் புதருக்கு
நடுவே ஓடுது சிறு படகு.

154. ஒரு கோப்பை பசும்பால்
ஊரெல்லாம் பெருகிடுமாம்

155. சின்னஞ் சிறு அறையில்
சீராக வாழ்ந்திடுவார்;
கறுத்த உடை அணிவார்.
கவலை யில்லாத் துறவி அவர்.
கள்ளைக் குடித்திடுவார்;

கடவுளைப் பாடிடுவார்.