பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

வேண்டும் விடுதலை

கொண்டா இருக்கிறது? இந்திரா அம்மையாருக்கு அவ்வளவு துணிச்சல் வராது. வரலாறு புரட்சியைப் படைக்காது, புரட்சிதான் வரலாற்றைப் படைக்கும் ஒவ்வொரு நாட்டு விடுதலைப் புரட்சியும் ஒவ்வாரு வரலாற்றைப் படைக்கும், நம் நாட்டில் ஐந்தே ஐந்து பேர் செத்தால் போதும் நமக்கு விடுதலை கிடைத்துவிடும் என்று விடுதலை கேட்டு எழத் தயங்கும் தமிழர்களைத் தூக்கி நிறுத்துமாறு பேசினார்கள். மேலும் பேசுகையில் காவல்துறையினரும், புலனாய்வுத் துறையினரும் இப்போது தம்தம் கடமைகளைச் செய்யலாம். ஆனால் ஒருகாலம் வரும். அப்போது நீங்கள் உடனே மாறிக் கொண்டு எங்களுடன் சேர்த்து ஒத்துழைக்க வேண்டியிருக்கும் என்றும் குறிப்பிட்டார்கள்.

தம் கை பாட்டு மட்டும் எழுதாது; கருவியும் செய்யும் - அஃதாவது கருவி ஏந்தும் என்று சொல்லவில்லை; கருவி செய்யும் என்று கூறித் தாம் எல்லாவற்றிற்கும் அணியமாக இருப்பதாகவும் அவ்வாறே பலர் அணியமாக இருப்பதாகவும் கூறி நடுவணரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்கள்.

பின் பாவலரேறு அவர்கள் தமிழக விடுதலைத் தீர்மானக் குறிக்கோளையும், செயற்பாட்டையும் (பிறிதொரு பக்கத்தில் உள்ளன) படித்துக்காட்டிக் குமுகாய மாநாட்டுத் தீர்மானத்தையும் நிறைவேற்றுவதற்கான பொதுச்செயல் திட்ட அமைப்பை விளக்கினார்கள். அதை விளக்கும் முன் தமிழக விடுதலை இயக்கம் சூன் 1, 1972 முதல் இயங்கத் தொடங்கிவிட்டதென்று அறிவித்தார்கள். செயல் திட்ட அமைப்பில் 'வேந்தம்' தலைமையானதென்றும் அதில் பொதுச் செயலர் உள்ளிட்ட ஐவர் இருப்பர் என்றும், பொதுச் செயலரை மாற்றும் உரிமை வேந்த உறுப்பினர்க்கு உண்டென்றும், தலைவர் இல்லை என்றும் கூறினார்கள். தலைமைப் பொறுப்பின் சுமையை விளக்க முற்பட்டுத் தாம் கலைஞர் மு. கருணாநிதியைச் சிலகால் கண்டித்துப் பேசினாலும், பல எதிர்ப்புகளுக்கிடையில் அவருடைய தலைமையை நிலைப்படுத்திக் கொண்டிருக்கும் திறம் கண்டு எல்லாம் அவர்க்குத் தகும் என்று கருதுவது உண்டென்றும் கூறினார்கள்.

வேந்த அமைப்புக்குக் கீழ் கொற்றம், வாரியம், ஆயம் என்னும் மூன்று கீழ்ப் படிநிலை அமைப்புகள் இருக்குமென்றும் ஆயத்தில் உறுப்பினராக எவரும் இராரென்றும். பத்துப் பேர் ஆர்வலராகச் சேர்க்கப் பெறுவர் என்றும், ஆர்வலர்க்குக் கட்டணம் இராதென்றும், ஓர் ஆர்வலர் ஆபயத்தில் சேரப்