பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

வேண்டும் விடுதலை




 
யாருமில்லை; நாங்கள்தாம்!


ண்மையில், தமிழகப்பிரிவினைப் பற்றித் தமிழ் நாட்டின் உள்முகக் கிளர்ச்சி ஒன்று சூடு பிடித்துக்கொண்டு வருகின்றது. தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாநிலத்தன்னாட்சி முறையை ஆங்காங்கே வலியுறுத்தி வருகின்றார். அவர் கொள்கைக்குச் சில கட்சிகளின் தவைர்கள் வலிவான எதிர்ப்புக் காட்டி வருகின்றார்கள். அந்த எதிர்ப்புகளைத் தற்காலிகமாகச் சரிகட்ட வேண்டியோ, வேறு கரணியம் பற்றியோ தமிழக முதல்வர். தாம் கேட்கும் மாநிலத் தன்னாட்சிக்குப் பல வகையான கொள்கை விளக்கங்களைக் கூறி வருகின்றார். அத்துடன் நம் நாட்டு ஒற்றுமைக்குத்தான் முதலிடம் கொடுக்க விரும்புவதாகவும் தன்னாட்சிக்கு அடுத்த இடந்தான் என்றும் எடுத்துக்கூறித் தாம் கேட்கும் மாநிலத் தன்னாட்சி என்பது தமிழகம் இந்திய ஆட்சியினின்று தனியாகப் பிரிய வேண்டும் என்னும் கருத்தில் கூறப்படுவதன்று மாநிலங்களுக்குத் தன்னிறைவான அதிகாரங்கள் வழங்கப் பெற்று. அவை நாட்டு முன்னேற்றத்திற்கெனத் தன்விருப்பமாகச் செயற்பட வேண்டும் என்னும் வகையில் கூறப்படுவதாகும் என்று தெளிவாக விளக்கியுள்ளார். அதுவுமன்றிப் பிரிவினைக் கோட்பாட்டைத் தம் கட்சி எப்பொழுதோ கைவிட்டுவிட்டது என்றும். எனவே நாட்டில் வேறு சிலரால் எழுதப்பப் பெறும் அத்தகைய கொள்கை முழக்கங்களுக்குத் தம் கட்சி பொறுப்பாகாதென்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இக்கொள்கைக் குழப்பங்களைக் கண்டஎதிர்க்கட்சிகள் சிலவும். இந்திய ஒற்றமை என்னவோ தம்மால்தான் கட்டுண்டுக் கிடப்பதாக எண்ணிப் பெருமிதப்பட்டுக் கொள்ளும் ஒருசில செய்தித்தாள்களும்,