உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி


எழுச்சி இயக்கத் தலைவனுக்கு -நாம் தலை வணங்குவோமாக!

ஏன் தெரியுமா? உலகிலே இனமான விடுதலை எழுச்சிக்காக போராடிடும், இன இயக்கம் இரண்டு உள அதற்காக! ஒன்று, தமிழகத்திலே உள்ள திராவிடர் இன இயக்க எழுச்சி, அதாவது, டிரவிடியன் மூவ்மெண்ட்.

மற்றொன்று அமெரிக்காவிலே இயங்கும் மார்டின் லூதர் கிங்கின் கறுப்பர் இன இயக்கம்! அதாவது, நீக்ரோ மூவ்மெண்ட்.

மக்கள் உரிமைக்காக, உலக அமைதிக்காகப் போராடிய அந்த மாவீரனை அளித்த நீக்ரோ இனத்தை - வாழ்த்துவோமாக!

"நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்து இவ்வுலகு"(குறள்)

-என்ற, அய்யன் திருவள்ளுவர் பெருமான் வாழ்க்கைப் புகழ் தத்துவ இலக்கண மாண்பை அருமையோடு பின்பற்றிப் பெருமையோடு வாழ்வோமாக!


89