ஐங்குறுநூறு 111-120
தோழிக்கு உரைத்த பத்து என்னும் தலைப்பின் கீழ் உள்ள இந்த 10 நெய்தல் திணைப் பாடல்களைப் பாடியவர் அம்மூவனார்.
- இந்தப் பாடல்கள் ஆசிரியப் பாவால் ஆனவை.
- அம்ம வாழி தோழி என்று எல்லாப் பாடல்களும் தொடங்குகின்றன.
இவற்றில் கூறப்படும் செய்தி
[தொகு]111
[தொகு]பெற்றோர் வெளியில் விடாமல் இல்லத்திலேயே நம்மை அடக்குவர் எனச் சொல்லக் கேட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லல்.
- பாணன் கழியின் ஓடரத்தில் முட்டையிடும் மீன்களைப் பிடித்து உண்பான்.
அந்தத் துறைத் தலைவனைப் பிரிந்தும் வாழவேண்டி வருமா? அவன் எப்போதும் உடனிருக்கத் தவம் செய்யாது போனோமே!
112
[தொகு]தலைவி தோழியிடம் சொல்லல்
சேர்ப்பனைக் கனவில் கண்டதற்கே நெஞ்சம் நாணுகிறது. அவனை மறந்தோம் அல்லோம் என்பதற்கு இதுதானே சான்று.
113
[தொகு]வெளியே இருக்கும் தலைவன் கேட்கும்படி தலைவி சொல்கிறாள்.
நேற்று ஊரார் அவன் பெண்டு இவள் என்றனர். அது கேட்ட அன்னை என்னை 'அன்னா' என்று அதட்டினாள். நான் 'பை பய' (பையப் பைய) பேசு என்றேன். (அவன் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்பது கருத்து)
114
[தொகு]வெளியில் காத்திருபவனுக்குக் கேட்கும்படி தலைவி தோழியிடம் கூறியது
- நாரை இரற்றும் - எனல் தமிழ் ஒலி மரபு
பெண்ணை மடலில் இருந்துகொண்டு நாரை இரற்றும் நாடன் அவன். அந்தக் கொண்கனுக்கு நாம் நம்மைக் கொடுக்காவிட்டாலும் அவன் தேரில் ஏறிச் செல்லலாம்.
115
[தொகு]இல்லத்தில் அடைந்துகிடக்கும் தலைவி வெளியில் காத்திருக்கும் தலைவன் கேட்கும்படி தோழியிடம் சொன்னது
கடல் மணல் வெளியில் அவர் பலமுறை நம்மோடு விளையாடியதை நான் மறைத்தேன் என்று தாய் எனக்குக் கட்டுக்காவல் போட்டுவிட்டாள்.
116
[தொகு]தலைவன் கேட்கும்படி தலைவி தோழியிடம் சொல்லல்
- எற்பாடு = பொழுது இறங்கும் காலம் (பிற்பகல் 2-6 மணி) (எல் = ஒளி, ஒளி தரும் சூரியன். பாடு = படுதல், பட்டுப்போதல், மறைதல்.)
எற்பாடு நேரத்தில் நாம் அவர் வருகையை எண்ணி அழுவதைப் பார்த்து நீலம்(பூ) கூம்பிற்று. மாலை வந்துவிட்டது. காலைநேரம் வரக்கூடாதா?
117
[தொகு]தலைவன் கேட்கும்படி தலைவி தோழியிடம் சொல்லல்
புன்னை மலர் பூத்திருப்பது தலைவனை மறவாதிருக்கும் தலைவிக்குக் கொடிது. (புன்னை மலரும் வேனில் காலத்தில் திருமணம் நடைபெற வேண்டுமே. இவள் தலைவன் திருமண நிலைக்கு வரவில்லையே)
118
[தொகு]அவன் அறனிலாளன் (அறநெறி இல்லாதவன்). அவனை கண்டபோது சினங்கொண்டு பேசவேண்டும், அவனைத் தடுத்து நிறுந்தவேண்டும் என்று எண்ணிக்கொண்டு சென்றேன். கண்டபோது இரக்கப்பட்டுப் பின்தாங்கிவிட்டேன். - தலைவி தோழியிடம் சொன்னாள்.
119
[தொகு]- 'மென்புலக் கொண்கன்' = வாய்ப்பந்தல் போடுபவன்.
தலைவன் கேட்கும்படி தலைவி தோழியிடம் சொல்லல்
அவன் 'மென்புலக் கொண்கன்' தன் எய்யாமையால் (இயலாமையால்) எதேதோ சொல்கிறான்.
120
[தொகு]பொருள் தேடச் சென்றவன் திரும்பிவிட்டான் என்னும் ஆறுதல் மொழி. தலைவன் சிறைப்புறத்தானாகத் தோழியிடம் தலைவி கூறியது.
புலம்பன் வந்துவிட்டான். இரங்கத் தக்க என் தோள்கள் நல்லன ஆகிவிட்டன.