உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெறுந்தாள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 - வெறுந்தாள் அவள் அறிவுப் பசியின் அடிப்படை எனக்கு விளங் கியது. அவள் வாழ்க்கையில் ஏதோ ஒரு லட்சியவெறி ஒளி வீசுவதைக் காண முடிந்தது. 'நீங்கள் இருக்கிறீர்கள். துணிந்து சொல்கிறேன். He has insulted me a number of times" GT6Nspirgit of Lib. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. மற்றவர்கள் முன் னால் என் மனைவி ஒரு நாள் கூடக் கண்டித்துப் பேசியது இல்லை. அவர்கள் எல்லாம் போன பிறகுதான் அவள் வீட்டைப் பெருக்க ஆரம்பிப்பாள். இங்கே ஒரு பெரிய மாறுபாட்டைக் கண்டேன். - 'நான் நேரே பேசித் திருத்த விரும்பவில்லை. இரண்டு பேரும் முரண்பட்ட கருத்தைப் பேசினால், நிச்சயமாகச் சண்டை வரும். அதற்காகத்தான் உங்களை முன்னால் வைத்துப் பேசுகிறேன்' என்றாள். டாக்டரோ தான் அவள் மனத்தைப் புண்படுத்தியதாக நினைத்துப் பார்த்தது இல்லை. அது அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. புதிய சிகரெட்டை வாயில் கொண்டு நெருப்பைப் பற்ற வைத்தார். அதாவது சூடுபிடிக்கும் பேச்சை அவர் எதிர் பார்த்துக் கொண்டிருந்தார் என்பதைத் தெரிந்து கொண்டேன். 'பெண்ணுக்கும் Self Respect இருக்கிறது. அதை அவர் எண்ணிப் பார்ப்பதே இல்லை' என்றாள். சுய மரியாதை இயக்கத்தைப் பற்றி அவள் பேசுவது போல எனக்குத் தோன்றியது. - நான் அவள் எடுத்துச் சென்ற பிரசுரிக்காத கதையை விமரிசனம் செய்யத்தான் போகிறாள் என்று எதிர் பார்த்தேன். 'விதவைத்தனம் என்பது ஒரு பாதிப்பே தவிர அது அவளிடத்தில் ஏற்படுகின்ற பருவ மாறுதல் அல்ல' என்று கூறினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/25&oldid=914527" இலிருந்து மீள்விக்கப்பட்டது