பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்


செய்யும் நல்ல போரை வென்றபோது, அப் ,பகை மன்னர் களின் ஆண் யானைகளைக் கவர்ந்து கொண்ட சமயத்தில் உண்டான ஆரவாரத்தைப் போல் பலர் வாயிலும் அலரா கின்றது. எனவே யான் தலைவியினது ஊடல் தீர்த்தல் முடியாது. என்று வாயில் மறுத்தாள் தோழி.

193. தோழி வா தலைவி காணச் செல்வோம்

எரி அகைந்தன்ன தாமரைப் பழனத்து, பொரி அகைந்தன்ன பொங்கு பல் சிறு மீன், வெறி கொள் பாசடை, உணிஇயர், பைப்பயப் பறை தபு முது சிரல் அசைபு வந்து இருக்கும் துறைகேழ் ஊரன் பெண்டு தன் கொழுநனை நம்மொடு புலக்கும் என்ப- நாம் அது செய்யாம்.ஆயினும், உய்யாமையின், செறிதொடி தெளிர்ப்ப வீசி, சிறிது அவண் உலமந்து வருகம் சென்மோ - தோழிஒளிறு வாட் தானைக் கொற்றச் செழியன் வெளிறு இல் கற்பின் மண்டு அமர் அடுதொறும் களிறு பெறு வல்சிப் பாணன் எறியும் தண்ணுமைக் கண்ணின் அலைஇயர், தன் வயிறே.

- ஆலங்குடி வங்கனார் அக 106 “என் தோழியே, தீயானது கொழுந்து விட்டாற் போன்ற இதழ் திறந்து மலர்கின்ற தாமரை மலர்களையுடைய வயல் கள். அங்கு நெற்பொரி முதலியன தெறித்தாற் போன்று பல சிறிய மீன்கள் விளங்கும். அவற்றை உண்ணும் பொருட்டு மணமுடைய பசிய இலையில் பறப்பதைக் கைவிட்ட முதிய சிச்சிலிப் பறவ்ை. மெல்ல மெல்ல அசைந்து வந்திருக்கும். இத்தகைய துறையை உடைய ஊரனின் மனைவி ‘தன் கணவனை நம்மொடு கூட்டி வெறுத்துப் பேசுகின்றாள்’ என்றர். நாம் அதற்குக் காரணமான ஒன்றைச் செய்ய மாட்டோம். ஆயினும் அவள் கூறும் பழியினின்றும் நீங்க மாட்டாமையின், விளங்கும் வாளையுடைய வெற்றி பொருந்திய பாண்டியன் குற்றம் இல்லாத படைப் பயிற்சி யுடன் கூடி நெருங்கிய போரில் செல்வான். அவன் வெல்லுந்