உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்ட ஆழ்கடல் 119

வில்லாகிய ஏர் கலப்பையால் பகைவரது உடலாகிய வயலில் உழுகின்ற போர் மறவரின் பகையைக் கொண்டாலும், சொல்லாகிய ஏரால் உழுகின்ற புலவர்களின் பகையைக் கொள்ளாதே என்னும் கருத்தில்,

வில்ஏர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல் ஏர் உழவர் பகை

(872)

என்னும் குறட்பாவைத் திருக்குறளில் காணலாம். திருவள்ளுவர் போர் மறவரை வில் ஏர் உழவர்' என்று குறிப்பிட்டிருப்பதுபோல், கம்பர், போர் மறவனாகிய தயரதனை வாள் உழவன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

அலசினேன்

தயரதன் இராமனை நோக்கி, உனக்கு முடிசூட்டக் கருதியுள்ளேன். சூழ்நிலை முழுவதையும் அலசிப் பார்த்தே இந்த முடிவுக்கு வந்தேன் என்று கூறினான். இங்கே அலசுதல்' என்னும் எளிய சொல்லாட்சி இடம் பெற்று ஒரு வகைச் சுவை பயக்கிறது. "ஐய சாலவும் அலசினென்” (61) என்பது பாடல் பகுதி.

கணிதர்

தயரதன் இராமனுக்கு முடிசூட்டுவதற்கு உரிய நல்ல நாளைக் கணிதரோடு சூழ்ந்து தேர்ந்தெடுத்தானாம். சோதிடர் என்னும் வட சொல்லுக்கு நேரானது கணிதர்' என்னும் சொல்.

உரைதெரி கணிதரை ஒருங்கு கொண்டு ஒரு
வரை பொரு மண்டபம் மருங்கு போயினான்

(85)

என்பது பாடல் பகுதி.

மந்தரை சூழ்ச்சிப் படலம்

மாற்றவள்

சக களத்தி என்னும் வட சொல்லுக்கு நேரானது மாற்றவள்' என்பது. கூனி கைகேயியை நோக்கி உன்