பக்கம்:அலை தந்த ஆறுதல்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

அலை தந்த ஆறுதல்


செய்தது கூடப் பாதாது...அந்தப் பொண்ணு சிங்காரிய அவுங்க படுத்துறபாடுதான் சொல்லி முடியாது...பொண்ணை வெளில பழக விடாம ஆட்டுக்குள்ளாறயே பூட்டி வச்சிருந்தா நல்லா வளக்கறதா நெனக்சுக் கிட்டிருக்காங்க...அத மாத்தணும்.இது எவ்வளவு பெரிய முட்டாத்தனம்! நாஞ் சொன்னாக்க அவ்வளவு எடுபடாது எல்லாம் மொரடு...!

ஆண், பெண் பழக்கத்த பத்தி நம்ப நாட்ல இருக்கற எண்ண த்த காலத்கக்கு ஏத்தாப்ல மாத்தறது அவ்வளவு சொலபமில்லே! படிச்சதா நெனச்சுட்ெடு இருக்கற செ ல பேருங்க கிட்ட கூட இன்னும் இந்தப் பழைய நெனப்புதானெ இருக்குங் கய்யா!

தம்பி! என்னைப் பெ ாறுத்தவரைல கிராமங்கள்ள, முக்கியமா இந்தக் கல்யாணம், புள்ளைப்பேறு, புள்ளை வளர்ப்பு. வரவு செலவ, நாலு பேரு கிட்ட எப்பிடிப் பேசறது ஆக இந்த மாதிரி விஷயங்களுக் காவது ஒங்களை மாதிரி ஆளுங்க இங்கெயே தங்கி அவங்களோட கலந்து வாழ்ந்து சொல்லிக் கொடுத்தா ப்ரச்சனைங்க கொறையும்னு நெனைக் கிறேன்...

நீங்க சொல்றது ரொம்ப சரிங்கய்யா. சட்டமோ, அதிகாரமோ மக்களைத் திருத்தாது.கல்விதான் அதைச் செய்யமுடியும்.