பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

ஆழ்கடலில்



(விரிவுரை) இந்தக் குறளில், தலைமகளின் நலனைப் புனைந்துரைக்கும் தலைமகன் வாயிலாக, வள்ளுவர் உலக மக்களைச் சாடுவதான குறிப்பின் வாடை வீசுகின்றது. மான் போன்ற மருண்ட பார்வையையும் நாணத்தையும் விட, ஒரு பெண்ணுக்கு அழகு தரும் அணிகலன் (ஆபரணம்) வேறு என்ன இருக்க முடியும்? அந்த இயற்கை அணிகலன் இரண்டும் உடையவளுக்கு வேறு நகைகளும் வேண்டுமா? "அல்வா" துண்டுக்குச் சர்க்கரை தொட்டுக் கொள்வதுண்டா? மட நோக்கும் நாணமும் இல்லாதவளுக்கு எவ்வளவு நகை போட்டாலும் எடுக்குமா? கசக்கும் காஞ்சிரங்காயானது, எவ்வளவு இனிப்புச் சேர்த்தாலும் இனிக்குமா? பலரோடு பொருத்திப் பார்க்கும்போது, இந்தக் கருத்துகள் எல்லாம் உண்மை என்பது புலனாகும்.

இங்கே கூறப்பட்டுள்ள இயற்கையணிகள் இரண்டினையும் இன்னுஞ் சிறிது ஊன்றிக் கவனிக்க வேண்டும். மட நோக்கு என்பது, புற உறுப்பாகிய கண்ணுக்கு அணிகலம்; நாணம் என்பது, அக உறுப்பாகிய மனத்துக்கு அணிகலம். இவையிரண்டும் தொடர்புடையன. அகத்தில் நாணம் இருந்தால்தான், முகத்தில்-கண்களில் மடநோக்கு இருக்க முடியும்! அகத்தின் அழகு முகத்தில் தெரியுமல்லவா? அகத்தில் நாணம் இல்லாத காளிகளுக்கு-உள்ளத்தில் கூச்சம் இல்லாத பேய்-பிசாசு-பிடாரிகளுக்கு மடநோக்காவது, மண்ணாங்கட்டியாவது! - -

எனவே, உலக மக்களே! இரவல் நகை கூடாது; சொந்த நகையே போட்டுக்கொண்டிருக்க வேண்டும். இரவல் நகை என்றால். ஒருவன், நகையில்லாத தன் மனைவிக்குப் போடுவதற்காக, நகை வைத்திருக்கின்ற மற்றொருவனிடம் சென்று, மான மின்றி-தன் கையாலாகாத்தனத்தைத் தானே வெளிப்படையாய் ஒத்துக்கொள்பவன் போல இரவல் கேட்கிறானே, அந்த இரவல் நகை