உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் நோக்கில் காலமும் கடிகாரமும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

கடிகாரத்தில் மணியடிக்கும் எந்திர நுட்பம்

முன்னாளில் கடிகாரம் மணியடிப்பதைக் கொண்டே காலத்தையறிந்தனர். பின்னரே முட்களைக் கொண்டு முகத்திலுள்ள (Dial) எண்களைக் காட்டச் செய்து காலத்தை அளந்தனர்.

கடிகாரத்தில் மணியடிக்குமாறு செய்ய இருவகை எந்திர அமைப்பு முறைகள் கையாளப் படுகின்றன. இவற்றுள் அமெரிக்க, பிரெஞ்சு, ஜெர்மனி, சுவிசு கடிகாரங்களில் கையாளப்படும். 'அடைப்புத் தகட்டமைப்பு’ முறையே (Locking plate Mechanism) சிறந்தது எளியது. காலத்தைக் காட்ட உள்ள அமைப்பைத் தவிர மணியடிக்கத் தனி உருளைத் தொடர் உண்டு.

இவ்இரு அமைப்புகளும் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டவை. நிமிடம் காட்டும் உருளையின் மீதுள்ள ஓர் ஊசி, நெம்புகோலின் அமைப்புகளுள் ஒன்றை இயக்குகிறது. முதலில் மணி அடிக்கும் தொடர் சற்று விடுவிக்கப்படுவதால் தான் மணியடிக்குமுன் எச்சரிக்கை செய்வது போல் ஒருவித ஒலி ஏற்படுகிறது.

பல்வேறு நெம்புகோல்களின் புயங்கள் உயர்த்தப்படும்போது, தொடரின் நான்காம் உருளை விடுவிக்கப்படும். நெம்புகோலின் புயங்கள் விழும்போது மணி அடிக்கும் தொடர் இயங்குகிறது.