110
கொள்ளவேண்டும். இந்த ஒரு வாசகத்தைக் கேட்க முடிகிறது. பெண்கள் “அப்பா அம்மா இஷ்டம்” என்று சொல்லித் தப்பித்துக் கொள்ளும் பழக்கமும் இன்னும் நீங்கவில்லை. அவர்களால் முடிவு செய்ய முடியாத நிலை அவ்வளவுதான்.
“பையன் அவளை வைத்துக் காப்பாற்றுவானா"’ என்பதுதான் முதல் கேள்வி. அந்த அளவு இருந்தால் போதும் என்ற மனநிறைவும் மன்றல்களை முடித்துத் தருகிறது. ஒரு பெண்ணைப் பற்றி முடிவு செய்யும்போது மூன்று அளவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அழகு, கல்வி, செல்வம்; இவற்றில் ஒன்று இரண்டு குறைந்தாலும் சரி செய்துகொள்ளும் மனப்பக்குவமும் நம்மில் பலர்க்கு உண்டு. எப்படியும் கலியாணமானால் போதும் என்ற ஆர்வம் இந்த உன்னத முடிவுக்குத் துணை செய்கிறது. எப்படியோ நம் நாட்டில் பெண் வசதி படைத்தவளாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மற்றவர்களுக்கும் கலியாணம் ஆகிறது. மறுக்கவில்லை.
“குணம் இருந்தால் போதும்” என்று ஆத்மதிருப்தி பெறுகிறவர்களும் உண்டு. முக்கியமாகக் குணத்தைத்தான் பார்க்க வேண்டும் என்ற அறிவுரைகள் தரப்படுகின்றன. ஏன் மற்றவை இருக்கும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இல்லை என்ற காரணத்தால், மற்றொரு நியாயமான காரணமும் உள்ளது. அழகின் ரசனை அவன் சொந்த விஷயம்; செல்வம் பெற்றோர்கள் கவனித்துக் கொள்வார்கள்; பொதுவாக ஏதாவது சொல்ல வேண்டுமென்றால் குணத்தைப் பற்றித்தான் சொல்லமுடியும்.
பொதுவாக நம் நாட்டில் அவன் அவளைச் சரியாக வைத்து வாழவேண்டுமே என்ற அடிப்படை.தான் இருந்தது; இப்பொழுது அவள் அவனோடு ஒழுங்காகக் குடித்