வச்சணந்தி மாலை - IV
Appearance
வச்சணந்தி மாலை என்னும் வெண்பாப் பாட்டியலும் வரையறுத்தப் பாட்டியலும்
வரையறுத்த பாட்டியல் ( சம்பந்தப் பாட்டியல் )
1. கட்டளைக் கலித்துறை பார்கொண்ட சோதியன் சம்பந்த மாமுனி பாதமலர் நேர்கொண் டிறைஞ்சி நிகழ்த்துகின் றேனெடு நூல்சுருக்கி ஏர்கொண்ட சொற்புல வோர்செய்த பாட்டியல் கற்கமிக்க சீர்கொண்ட மாமதி யில்லா தவர்க்குத் தெரிவுறவே. 2. தெரியாது வந்த வழியடை யாளுஞ் சிலர்தமக்கு மரியாதை யின்றென் மதியன்மை யாற்சொன் மழலைப்புன்சொல் பெரியார் பொறுப்பர்தம் பேரறி வாண்மையும் பேதைமைபோய் விரியாத வென்னறி வின்மையும் பாரில் விளங்குதற்கே. 3. விளக்கிய மங்கல மேமுத லாக விரித்தபத்தும் துளக்கற நாடும் பொருத்தமன் றேயில்லை சொல்லறியா உளக்கவி வாண ரெனைப்போல நாடொறு முண்பொருட்டால் வளக்கவி பாடிப் பிழைப்பதிந் நூலின் வரும்பயனே. 4. சீர், எழுத்து வருகின்ற மங்கலச் சொல்லினுட் சீர்கொள்க வாய்ந்தகக்கா அருகொன்று கிக்கீசொச் சோக்கள்நந் நாவொ டடுத்தநிந்நீ தருகின்ற யாவொடு வவ்வாவிவ் வீப்பெயர் தங்களுக்கு முருகொன் றெழுத்துநுந் நூயூப் பெயர்க்கு மொழியநன்றே. 5. பொன், பூ மொழிபொன்குக் கூவுஞ்செள காரந்துத் தூவு முரணிதெத்தே அழிவில்நெந் நேயோடு புப்பூமெம் மேயோ டகன்றமொம்மோ வழுவின்வெள காரப் பெயர்க்குரை பூக்கொண் டிசைக்ககெளசை வழிகொண்மம் மாமிம்மீ மும்மூவை காரவெள காரங்கட்கே. 6. திரு, திங்கள், மணி, நீர் வெளவுந் திருத்திங்க ளென்சொற்கள் கொக்கோ வரும்பெயர்க்காம் செவ்வுண் மணிச்சொற்கெக் கேப்பெயர்க் காஞ்செழு நீர்ச்சொற்கையோ டிவ்வுண்சிச் சீயொடு தித்தீத்தை நெந்நோ வுடனிசையக் கெளவும்பை காரப் பெயர்க்குநன் றாம்படி கட்டுரையே. 7. சொல், கங்கை, வாரணம் கட்டுரை சொற்கொளெள காரஞ்சுச் சூக்கள்செச் சேக்கள்தெளநெள ஒட்டுரை பேர்க்கினி தாங்கங்கை அஆஒ ஓக்கள்தத்தா விட்டுரை தொத்தோ விழயோப் பெயர்க்குயர் யானையின்பேர்ப் பட்டுரை வாரணங் கொண்டுஞெஞ் ஞொப்பெயர் பாடுகவே. 8. குஞ்சரம், உலகு, பார் பாடுயர் குஞ்சரம் இஈயு ஞாவும் பகர்பெயர்க்காம் நீடுல கங்கொடு பப்பாப் பெயர்க்கு நிரந்துரைக்க பீடுறு பார்கொடு சச்சாப் பெப்பேயொ டொளிர்ந்தபொப்போ நாடுவெவ் வேமுதல் நண்ணியபேர்க்கு நயந்துரையே. 9. தேர் உரைதரு தேர்கொடு உஊஎஏஐ யுவந்தநைமை விரைதரு பேர்கட்கு நேரே விளம்புக மேவுதண்ணீர்த் திரைதரு வேலை யுடனேசெஞ் சேலையுஞ் சேரவென்று வரைதரு மஞ்சனந் தோய்ந்தரி சிந்திய வாள்விழியே. 10. வாளா வுரைப்பிற்றொன் னூலோர் வகுத்த வருணமுண்டி கேளார்ந்த நல்ல கதிகண மாய்ந்துரை கேழ்கிளரத் தாளார் கமலமு நீலமும் போன்று தருக்கி முட்டி நீளா மதர்த்தரி சிந்திய வாட்க ணிரைவளையே.