உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இனிய கதை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

________________

10 எரிந்தது தீ; கொதித்தது நீர்; வெந்தது அரிசி; தப்பித் தவறிக் கிடந்தது தேங்காய்ச் சில் ஒன்று; சுற்றிச் சூழ்ந்திருந்த 'பூரணம்' மாயமானது; உப்பு புளி, மிளகாய் ஒப்பந்தப் பத்திரத்தில் கைநாட்டுச் செய்தன. துகையல் தயாரானது. வடி தண்ணீர் கல்சட்டியில்; மிஞ்சிய கஞ்சி பானையில்; எஞ்சியது மண்ணுக்கு. மேலவளவுத் தொங்கலிலிருந்து தவழ்ந்து வந்த சினிமாப் பாட்டுக்களின் ஒலி! செல்லாயியின் நெஞ்சைத் தொட்டது, பசி வயிற்றைக் கிள்ளி யெடுத்தது. வாரிச் சுருட்டிக்கொண்டு மெல்ல எழுந்தாள்; மெள்ள நடந்தாள்; மனம் அல்லாடியது; உடல் தள்ளாடியது. குருவி மணலைப் பிரிமணையாக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீர்த் தவலை, அவளுக்குத்தான் பணிந்தது. திரும்பி நடந்தாள்; குடிசை வந்தது; குனிந்துதான் நுழைந்தாள்; இருந்தும் தலையை இடித்துத் தொலைத்தது. எண்சாண் உடம்பிற்கு எட்டடிக் குச்சுக்குமேல் தேவை ஏது? அங்காளம்மன் திருநாளில் பெரியட்டான் புரத்து மண்டகப்படி யன்றைக்கு குருக்கள் ஐயர் தந்த விபூதிப் பிரசாதம் காட்சியளித்தது, முதலில் எடுத்து அதை வாய்க்கும். அடுத்து அள்ளியதை நெற்றி மேட் டுக்கும்பகிரந்துகொண்டாள் அவள். கிழக்குப்பாரிசத்தில் பதித்திருந்த கண்ணாடித் துண்டொன்று, அவளை அழைத்தது. வதனம் பதித்தாள் கிழவி. சுருக்கம் விழுந்து தொங்கிய முகமும், குழிபறித்துக் கிடந்த கண்களும், நரைதிரண்ட கேசமும், ஒட்டிய வயிறும், உலர்ந்த உடலும், அப்போது அவளது பார்வையில் தட்டுப்படவில்லை. கடந்துவந்த நெருஞ்சி முள் காடு தெரிந்தது.தாண்டிவந்த அறுபத்தேழு மைல் கற்கள் காணக் கிடந்தன. தாம்பூலம் மாற்றி, பரிசம்போட்டு, தாலிபூட்டிய அவள் துணைவன் உடல்,பொருள், ஆவி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/10&oldid=1640540" இலிருந்து மீள்விக்கப்பட்டது