திருமுகச் செவ்வி 3 i
மூவரே கண்டார்கள். ஒருத்தி கைகேயி; மற்ருெருவர் கடவுள்; பின்னும் ஒருவன் கம்பன் கைகேயி கண்டும் காணுத குருடி. கடவுளோ கண்டும் சொல்லாத ஊமை கம்பன் ஒரு வனே கண்டதைச் சொல்ல முந்துகிருன். தான் மிகவும் கன் ருகச்சொல்லி விட்டதாக யாரேனும் எண்ணிக்கொண்டால் என் செய்வது என்ற அச்சமோ, கம்மால் முழுவதையும் உள்ளவாறு சொல்ல முடியவில்லையே என்ற இரக்கமோ, தெரியவில்லை; சொல்ல வேண்டியதைச் சொல்வதற்கு முன் ஒரு பீடிகை போட்டுக்கொள்கிருன். தன்னுடைய ஆற்ற லுக்கு அகப்பட்டதன்று அது என்பதைக் குறிப்பிடுகிருன். 'கான் என் உள்ளத்தே கண்ட காட்சியை, அதனம் பெற்ற உணர்ச்சியை, அப்படியே என்னல் சொல்ல முடியவில்லை. அப்பொழுது நான் அநுபவ உலகில் இருந்தேன். இப்பொழுது சொல் உலகுக்கு வந்து விட்டேன். அப்பொழுது அடைந்த அநுபவத்தை இப் பொழுது சொல்லால் கோலம் செய்வது எளிய காரியமா? என்னேப் போன்ற எல்லோருக்குமே இது இயலாதது' என்று அவன் சொல்லியிருப்பான், கம்மைட்போல வெற்று வார்த்தையை அடுக்குபவதை இருந்தால். ஆலுைம் அத்தனையையும் சில சொற்களிலே வைத்துத் தன் ஆற்ரு மையை உணர்த்தியே விடுகிருன். -
இப்பொழுது எம்ம ஞோால் இயம்புதற்கு எளிதே? அப்பொழுது பெற்ற அநுபவத்தை இப்பொழுது சொல்லால் வடிக்க முயலும் என்னைப் போன்றவர்களால் சொல்லுவதற்கு எளிதா அது? என்று கேட்கிருன். அவன் சொல்லத்தான் போகிருன், மற்றவர்கள் சொல்ல முடியாத வகையில் சொல்லியே விடுகிருன். ஆனாலும் அப்படி அவன் சொல்லுவதற்கு அதிக மதிப்பை உண்டாக்கி விடுகிருன், இந்தப் பீடிகையில்ை. -