இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
54 அழியா அழகு
அகக் கண்ணுல் காண்பது அது. அதைக் கம்பன் கண்டு சொல்கிருன்.
இந்தப் பாட்டில் முன் இரண்டடி அவ்வளவு முக்கியம் அல்ல; கதைத் தொடர்ச்சியை அவை சொல்கின்றன. அடுத்த இரண்டு அடிகளும், கம்பன் தனி சின்று அகக்கண்ணுல் இராமன் அழகை நுகர்கிருன் என்பதையும், அதனேச் சொல்லால் சொல்ல முயல்கிருன் என்பதையும், சொல் ாழுவும்போது உணர்ச்சி தழுவி சின்று அவனுக்கு வெற்றி யைத் தருகிறது என்பதையும், ஐயோ என்பது அந்த உணர்ச்சியைக் குறிக்கும் அடையாளச் சொல்லாக கிற்கிறது என்பதையும் புலப்படுத்துகின்றன.