178 அழியா அழகு
"வீழ்ந்தது கின்னலம்
திருவும் வீழ்ந்தது: வாழ்ந்தனள் கோசலை
மதியினுல்" என்ருள். '
கைகேயி இராமனைத் தான் பெற்ற மகளுகச் சொன்னது சம்பிரதாயத்துக்கு அன்று: ஆழ்ந்த பேரன் போடு சொன்னள். அந்த அன்பின் ஆழத்தை அவளுடன் நெருங்கிப் பழகும் கூனி நன்கு அறிந்திருப்பாள். ஆயினும் அவள் கைகேயியின் மனத்தை மாற்றிப் பழி முடிக்கவே எண்ணினுள். 'உன்னுடைய நன்மை விழுந்தது; செல்வ வாழ்வு அழிந்தது; கோசலை கெட்டிக்காரி, அவள் தன் சாமர்த்தியத்தால் வாழ்வு பெற்ருள்' என்று கோபத்தின் விரைவு தோன்றப் பேசுகிருள். அவள் பேசுகிருளா? விதியே அப்படிப் பேசுகிறது. இதனே கினேவுறுத்தவே,
சூழ்ந்ததீ வினைநிகர் கூனி
என்று பாடுகிருன் கம்பன்.
இன்னும் செய்தி இன்னதென்று சொல்லாமலே
கூனி பயங்கரமான சிலைக்களத்தை அமைக்கிருள். பிறகு செய்தியைத் தன் கொடுமனத்துக் கேற்ற வண்ணம் மூட்டிச் சொல்கிருள். 'ஆண்களெல்லாம்
சிரிக்க, வீரம் மாசுபட. தாடகை என்னும் பெயரையுடைய பெண் இறந்துபட, வளைத்த வில்லேயுடைய இராமன் காளேக்கு அரசர் புனேயும் முடியைச் சூடப்போகிருன்; இந்த வாழ்வு நமக்கு வந்திருக்கிறது' என்று உலகம் உவத்தற்குரிய செய்தியை இழிவு தொனிக்கும் முறையில் சொல்கிருள். இராமன். பெண் கொலை செய்தவன். ஆண்கள் கைப்புக்கு ஆளானவன் என்று சொல்கிருள்.
1. மந்தரை சூழ்ச்சிப் படலம், 48.