உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளையவர்களும் அவர்கள் மாளுக்கர்களும் 35

தங்களுக்குத் தெரிந்தவன் என்பதை அவர்கள் அறிந்துகொண்டு, அளவுக்கு மேலாகவே பணம் கொடுப்பார்கள். அதை நான் தங்களுக் காகக் கொடுத்ததாகவே எண்ணி வைத்துக் கொண்டிருக்கிறேன். இப்போது தங்களுக்குச் சிசிச்சை அளித்தேன் என்பதல்ை மேலும் என் பெருமைதான் மிகுதியாயிற்று. எனக்குச் சேரவேண்டியது முன்பே வந்து சேர்ந்து விட்டது என்று அதனல்தான் சொல் கிறேன்” என்ருர் டாக்டர்.

டாக்டருடைய பெருந்தன்மையை அறிந்து மகிழ்ந்த ஆசிரியப் பெருமானுக்கு அதற்கு மேல் என்ன சொல்வது என்று ஒன்றும் தோன்றவில்லை. தம் நன்றியைத் தெரிவித்துக்கொண்டு திரும்பி விட்டார்.

திருமானுர்க் கிருஷ்ணையருக்குச் செய்த உதவி

கும்பகோணம் கல்லூரியில் ஆசிரியராக இருந்த ஆர். வி. சீநிவாசையரை யூக்ளிட் சீநிவாசையர் என்பார்கள். அவர் பெரிய கணிதமேதை. கும்பகோணம் கல்லூரியில் ஆசிரியராகச் சேருவ தற்குமுன் ஆசிரியப் பெருமானைப் பரீட்சை செய்த அன்பர்களில் ஒருவர். 1901-ஆம் ஆண்டிற்குப்பிறகு அவர் ரெவின்யூ போர்டில் செயலாளராக வந்துவிட்டார்.

அவர் காலத்தில் ஜமீன்தார்களுடைய பிள்ளைகள் எல்லாம் படிப் பதற்காக ஒரு தனிப் பள்ளிக்கூடம் சென்னையில் பூந்தமல்விச் சாலை யில் நிறுவப்பெற்றது. அதற்கு மாரிசன் என்பவர் தலைவராக இருந்தார். -

அந்தப் பள்ளிக்கூடத்தில் தமிழைக் கற்பிக்க வேண்டுமென்று எண்ணிய சீநிவாசையர் ஆசிரியப் பெருமானுக்கு எழுதினர்; 'இந்தப் பள்ளிக்கு ஒரு தமிழாசிரியர் வேண்டும். ரூபாய் 60-க்குக் குறையாமல் மாதச் சம்பளம் கொடுக்கலாம்' என்று எழுதினர். அந்தக் காலத்தில் ரூ. 60 என்பது மிகப் பெரிய தொகை.

ஆசிரியப் பெருமானுக்கு அப்போது பாலக்காட்டில் பணி யாற்றிக் கொண்டிருந்த திருமானூர்க் கிருஷ்ணையர் நினைவுதான் வந்தது. அவர் ஆசிரியருடைய நூற்பதிப்புக்களுக்கு உடனிருந்து உதவியவர். அவர் இந்தப் பள்ளிக்கூடத்தில் வந்து அமர்ந்தால், அவருக்கு அதிக ஊதியம் கிடைப்பதோடு, நம் ஆராய்ச்சிக்கும் உதவியாக அவர் இருப்பதற்குரிய சந்தர்ப்பம் கிடைக்குமே என்று