உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:எழு பெரு வள்ளல்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

எழு பெரு வள்ளல்கள்

ஒரு சமயம் யாரோ முனிவர் ஆயினிடம் வந்தார். அவர் ஒரு நீல ஆடையை ஆயினிடம் கொடுத்து, "இது மிகவும் புனிதமானது; கடவுள் தன்மையை உடையது. இதை வைத்திருப்பவர்களுக்கு எல்லா வளங்களும் நிறைய உண்டாகும்" என்று சொன்னார்.

"தங்களுக்கு எங்கே கிடைத்தது?" என்று கேட் டான் வள்ளல்.

"நான் காட்டில் தவம் செய்துகொண்டிருந்தேன். அப்போது இரண்டு நாகங்கள் அங்கே சேர்ந்திருந்தன. அவற்றின்மேல் இந்த நீல ஆடை இருந்தது. சிறிது நேரத்தில் அவை போய்விட்டன. அவ்வாறு கிடைக்கும் ஆடை மிகச் சிறந்ததென்று நான் கேட்டிருக்கிறேன்."

"இதை நீங்களே வைத்திருக்கலாமே!"

"துறவியாகிய எனக்கு இது எதற்கு? பலருக்கு நலம் செய்யும் உன்னிடம் இருந்தால் சிறந்த பயனை நீயும் அடைவாய்; உன்னால் பிறரும் அடைவார்கள் என்று எண்ணி உனக்கு வழங்குகிறேன்."

அதை ஆய் பணிவுடன் வாங்கிக்கொண்டான். தக்க இடத்தில் அதைச் சேர்த்துவிட்டோம் என்ற உவகையுடன் முனிவர் விடை பெற்றுச் சென்றார், பிறருக்குக் கொடுப்பது ஆயின் வழக்கமேயன்றி ஒருவரிடமிருந்து ஒன்றைப் பெறும் வழக்கம் அவன்பால் இல்லை. ஆதலின் முனிவர் கொடுத்த ஆடையை வாங்கிக் கொண்டாலும் அவன் உள்ளம் உறுத்திக்கொண்டே இருந்தது. அந்தப் புனித ஆடையை வைத்துக் கொள்ள அவன் விரும்பவில்லை. யாருக்கு அளிப்பது என்று ஆராய்ந்தான். கடைசியில் அவனுடைய குலதெய்வமாகிய சிவபிரானுக்கு வழங்க முடிவு செய்