பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

அபிராமி அந்தாதி

உண்டாயின. எழுதித் தெரிந்துகொள்ள முடியாமையின் அதற்கு எழுதாக் கிளவி என்ற பெயர் உண்டாயிற்று.

எழுதா மறையில் பல வகைப் பொருள்கள் இருக்கின்றன. தங்கம் அகப்படும் கனியில் பிற உலோகங்களும் மண்ணும் நீரும் இருக்கும். ஆனால் எல்லாவற்றிலும் முக்கியமான பொருள் தங்கம்; அதுதான் அரிய பொருள். வேதமெனும் சுரங்கத்தில் பல பொருட்கள் கிடைத்தாலும் எல்லாற்றினும் மேலான பொருளாக விளங்குபவள் தேவி. வேதப் பெரும் பரப்பில் புகுந்தால் அவளை எளிதிலே கண்டுபிடிக்க முடியாது. அவள் அதன் சாரமாக, அதனுள் அமைந்த அரிய பொருளாக, விளங்குகிறாள். அதனால்தான், எழுதா மறையின் ஒன்றும் அரும் பொருளே’ என்றார்

அம்பிகைக்கு வேதவேத்யா' (லலிதாசகசிரநாமம் 335) என்று ஒரு திருநாமம் உண்டு. வேதங்களை அறியத் தக்கவள் என்பது அதன் பொருள். வேதங்களை முற்றும் அறிந்தோம் என்பவர்கள் அம்பிகையை உணராவிட்டால் அவர்களுடைய அறிவு பயன் பெற்றது ஆகாது.

வேதங்கள் அம்பிகையின் திருக்கோயிலில் உள்ள நாலுதிசை வாயில்களின் படிகளாக உள்ளன என்று நூல்கள் கூறுகின்றன. லலிதா ஸ்தவரத்னம் என்ற நூலில், அம்பிகை எழுந்தருளியிருக்கும் சிந்தாமணிக் கிருகத்தில் உள்ள நான்கு திருவாயில்களிலும் நான்கு வேதங்களும் உள்ளன என்ற செய்தி வருகிறது. கிழக்கு வாயிற்படியாக ருக் வேதமும். தெற்கு வாயிற்படியாக யஜுர்வேதமும், மேற்குப் படியாக அதர்வண மறையும், வடக்கே சாமவேதமும இருக்கின்றனவாம். இந்த அமைப்பு, வேதமென்னும் வாயிலின் வழியே சென்று