4
தரம் உயர்வதற்கும், சமூகத்தின் குறைபாடுகள் அகலவும், சமூக மனிதர்கள் மேனிலை எய்தவும் இப்பத்திரிகைகள் என்ன செய்திருக்கின்றன; செய்து வருகின்றன என்று கவனித்தால்,
நிலைமை உற்சாகம் தருவதாக இல்லை.
தற்காலப் பத்திரிகைகளின் போக்கில் அதிருப்தி கொண்டவர்கள், கசப்பு அடைகிறவர்கள். தமிழ்ப் பத்திரிகைகள் எப்பவும் இதே போல் தான் இருந்தனவா; முன்பு பத்திரிகைகளின் தன்மை எவ்வாறு இருந்தது என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
தமிழில் பத்திரிகைகளின் வரலாறு முறையாக எழுதப் படவில்லை. சமீபகாலத்தில் ஒரு சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, ஒன்றிரண்டு இதழியல் வரலாறுகளும், குறிப்பிட்ட காலகட்டத்தின் பலரகமான பத்திரிகைகள் பற்றிய தகவல் பட்டியல்களும் வெளிவந்திருப்பதாகத் தெரிகிறது.
சில கல்லூரிகளில் பாடத்திட்டத்தில் இ த ழி ய ல் ' சேர்க்கப்பட்டு, மாணவர்கள் ஆய்வில் ஈடுபடுவதாகவும் தெரிய வகுகிறது.
இவை எல்லாம் வரவேற்கப்பட வேண்டிய செயல்கள் தான். ஆயினும், இவை மட்டும் போதா. தமிழ்ப்பத்திரிகைகளின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிய முழுமையான வரலாறு தேவை. அது எந்தக் காலத்தில், எவரால் நிறைவு செய்யப்படுமோ சொல்வதற்கில்லை.
நான் இங்கே எழுத முற்படுவது பத்திரிகைகளின் முறையான வரலாறு இல்லை; இதழியல் ஆய்வும் இல்லை. ஒரு வாசகன் - இலக்கிய மாணவன் - என்ற முறையில்,