பக்கம்:எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21

 உருவாவதற்கும் திராவிட இயக்கப் பத்திரிகைகள் துணைபுரிந்தன.

சர்வதேச அடிப்படையிலும், மார்க்சீயக் கண்ணோட்டத்தில் சமூகப் பிரச்னைகளைக் காணவும், முற்போக்கு நோக்குடன் படைப்பு முயற்சிகளில் ஈடுபடவும் கம்யூனிஸ்ட் பத்திரிகைகள் உதவின. இவை வியாபார வெற்றி பெற்றன - வெகுஜன வரவேற்பை அடைந்தன - என்று சொல்லமுடியாது.

ஜனரஞ்சகமான வாரப்பத்திரிகையாக வளர்ந்து, வாணிப வெற்றி கண்டது குமுதம் . இது மாதம் மும்முறை' வெளியீடு ஆகத் தோன்றி, விரைவிலேயே வாரப் பத்திரிகையாக மாறியது. பத்திரிகையின் உள்ளடக்கத்திலுைம், அட்டைப்படக் கவர்ச்சியாலும் வாசகர்களைக் கவர்ந்தது.

அத்துடன், வானிப நோக்கில் பல விளம்பர உத்திகளும், அவ்வப்போது கையாளப்பட்டன. முக்கிய நகரங்களில் இலவசமாகப் பிரதிகளை விநியோகித்து வாசகர்களை ஈர்ப்பது, குறைந்த விலைக்கு மிக அதிகமான பக்கங்கள் தருவது, சிறப்பு மலர்களில் மருக்கொழுந்து சென்ட் பூசி கமகம வாசனையோடு பத்திரிகையை பரப்புவது; போனஸ் இதழ் என்று இலவச இணைப்புகள் கொடுப்பது; இரட்டை இதழ் என்று ஒரு இதழின் விலைக்கே இரட்டைப் புத்தகங்கள் (குறுநாவல், அல்லது சுவையான விஷயங்களின் தொகுப்பு ஏதாவது கொண்ட அதிகப்படியான இரட்டைக் குமுதம் ) வழங்குவது - இப்படி பலவகையாலும், குமுதம் வாங்குவது நமக்கு லாபம் என்ற எண்ணத்தை வாசகர்களிடையே உண்டாக்கியது.

பொதுவாக, பெரும்பாலான வாசகர்கள் தங்களை சிரமப் படுத்துகிற - சிந்திக்கத் தூண்டுகிற - அறிவுக்கு வேலை