105
‘உன் அகத்துக்காரர் எங்கே வேலையில் இருக்கார்? என்று சாவித்திரியை வினவினாள் மாலதி.
சாவித்திரியின் உதடுகளில் உண்மை உறைந்தது. ‘மாலதியிடம் என் அவல நிலையைச் சொன்னால், தன் அப்பாவிடம் சொல்லி ஏதாவது வேலைக்கு ஏற்பாடு செய்வாளே! ஆமாம், எங்கே வேலை பார்த்தால் என்ன?
விஷயத்தை விளக்கினாள் சாவித்திரி.
‘அப்படியா?...இன்றைக்கு ராத்திரியே அப்பாவிடம் சொல்லி ஆவன செய்கிறேன். நீ உன் விட்டு விலாசத்தைக் கொடு. நான் அடுத்த திங்கள் கிழமை எங்கள் காரை எடுத்துவந்து உன்னையும், உன் கணவரையும் எங்கள் வீட்டுக்கு அழைத்துப் போகிறேன். கவலைப்படாதே!
நாடக மேடையில் சம்பாஷணையை ஒப்புவிக்கும் பாங்கிலே மாலதி பேசினாள்.
சாவித்திரி அவளுக்குக் கரங் கூப்பி அஞ்சலி தெரிவித்துத் திரும்ப எத்தனித்தபோது, ‘சாவித்திரி, வா ஆளுக்கு ஒரு கப் காப்பி சாப்பிட்டுவிட்டுப் போகலாம்!’ என்றுசொல்லி அவள் கரம்பற்றி அழைத்துச் சென்றாள் மாலதி.
✽✽✽
புதிதாகத் திறக்கப்பட்டிருந்த ‘மைசூர் பவன’த்திலே கூட்டம் நெரித்தது. பெண்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த கூடத்தில் மாலதியும் சாவித்திரியும் அமர்ந்தார்கள். மாலதியும் சாவித்திரியும் அமர்ந்தார்கள். மாலதி கைப் பையைத் திறந்து கைக் குட்டையை எடுத்து முகத்தை லேசாகப்பட்டும் படாமலும் துடைத்தாள்; பிறகு குளிர்ச்சிக் கண்ணாடியை அணிந்தாள். சாவித்திரியின் வியர்வைத் துளிகள் அவளுடைய கைத்தறிப்