பக்கம்:உயிரில் கலந்தது.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{{}

படித்தார். இதைப் படிக்கிற ஒவ்வொரு தரமும் என் மனசு ஏன் இப்படி சந்தோஷப்படுது?... மன உணர்வுகளின் கலக்கமடையாத நினைவுடன் அவரது மனத்தின் மனத்தை வினவிஞர். கடிதத்தின் அடியிலிருந்த அந்தப் பெயரையும் பல முறை படித்தார். முகத்தில் மலர்ச்சி. எண்ணத்தில் கனவு. கனவில் சிரிப்பு. முன் பின் பார்த்தறியாத பெண்ணின் முகம் சுற்றிவிட்ட பம்பரமாகச் சுற்றியது. கோலமலர் விழிகளும், குழைந்திடும் கொண்டைப் பூச்சரமும், அவரது ரசிப்பு மனத் திற்கு விருந்து வைத்தன போலும் இந்தப் பெண் யார்? ரிஷிமூலம்-நதிமூலம் காண விழையலாகாது என்பார்கள்: இந்தப் பெண்களின் வியவகாரமும் அங்ஙனம்தானே?

இருந்திருந்தாற்போல, அங்கே அபரேஷன் அறை” அமைதி பூத்தது.

“தமிழரசி அலுவலகத்தின் சொந்தக்காரரான மணி முத்து வேலாயுதம் துணை ஆசிரியரின் தனி அறைக்குள் பிர வேசித்தார். நாற்காலியில் அமர்ந்து, பத்திரிகையின் நடவடிக் கைகளைப்பற்றி உரையாடினர். காங்கிரஸ் மகாசபையின் எதிர்பார்த்த வெற்றியை வைத்துத் தீட்டிய தலையங்கத்தைப் புகழ்ந்தார். திராவிட முன்னேற்றக் கழகத்தினருக்குக் கிடைத்துள்ள பதினைந்து இடங்களே வாழ்த்தி துணைத் தலை, யங்கம் எழுத வேண்டு மென்ற தம் உளநிலையைச் சொன்னர் துணையாசிரியர், “செய்யுங்கள்,” என்றார்,

முதலாளியின் கார் பறந்தது. பறக்க முயன்ற அச்சுப் படிவங்களைத் தம்முடைய கைப் பைக்குள் திணித்துகொண்டு அங்கிருந்து வெளியேறினர் ஞாலசீலன். - -

நடனராணியின் கார் குறுக்கிட்டது. குறுக்கிட்ட பதில் சிசிப்பு விழி விலகியது!

பிராட்வேயின் குறுகிய பாதையில் ப்ரந்து நெளிகின்ற சுறுசுறுப்புக்குக் கேட்க வேண்டுமா? -