பக்கம்:உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

உலக அறிஞர்களின்



"அன்பு என்பதைப் போல, பொய்யும் புலையும் நிறைந்த மொழி, வேறு எதுவும் கிடையாது” என்கிறார்.

அதே அன்பு பற்றி எழுதுகின்ற அந்தோனி என்ற அறிஞர் ஒருவர் இப்சன் கருத்துக்கு சற்று முரணாக, “உலகத்தின் மக்களிடம் எவன் ஒருவன் உண்மையான அன்பைக் காட்டி மதிக்கிறானோ, அவனே உண்மையில் வாழ்ந்து காட்டிய மனித நேயன் என்று மதிக்கப் படுபவனாகிறான்” என்கிறார்.

அதே அன்பை, ஆங்கில மகா கவிஞரான 'போப்' என்பவன் எந்த நோக்கத்தில் பார்க்கிறான் பாருங்கள்.

‘வாழ்க்கையின் வறுமையிலே துன்பப்படுவோர்களுக்காக இரங்குக! இன்புறுவோர் துன்புறும் மக்களுக்குக் காட்டும் இரக்கம் மட்டுமல்ல அது; கடன், கடமை, மனிதநேயம் என்று கூறும் இந்த கவிஞர், இங்கிலாந்து நாட்டில் கி.பி.1688-ஆம் ஆண்டு தோன்றி கி.பி. 1744-ஆம் ஆண்டில் மறைந்தவர். அதாவது தனது 56 ஆண்டு காலத்தில் அவர் கண்ட அனுபவ அன்பு அது.

சுவீடிஷ் நாட்டின் அறிஞரான மேட்டர் லிங்க் என்பவர், அன்பு குறித்து கூறும்போது, 'அன்பு மூலமே எதையும் காண முடியும். அன்பு இல்லாமல் எதையும் காண்பவன் இருட்டில் தனது கண்களை இடுக்கிக் கஷ்டப்பட்டுக் காண முயலுகிறவனுக்குச் சமம் அல்லவா? என்று கேட்கிறார் உலகைப் பார்த்து.

இதே 'அன்பை' போர்ன் எப்படி அளவிடுகிறான் பாருங்கள்; வியப்பு புகழும், அன்பு ஊமையாய் இருக்கும் என்கிறார்! ஆனால், மாவீரன் நெப்போலியன், தனது