பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பக்திசாரர் #91 வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசித்தும் போக்கினேன் போது “ என்றும் கூறியிருத்தலால் இதனை நன்கு அறியலாம். என்றும் பக்தியையே நாடி நின்றவர் இந்த ஆழ்வார் என்பதை, பெறற்கரிய நின்னபாத பத்தியான பாசனம் பெறற்கரிய மாயனே எனக்கு நல்க வேண்டுமே.' [நின்ன - உன்னுடைய பாதம் - திருவடி, பாசனம் - மரக்கலம்) என்ற பாசுரப் பகுதியால் தெளியலாம். திருவடியை நாடி நிற்கும் பக்தியாகிய மரக்கலத்தைத் தந்தருள வேண்டும் என்று வேண்டுகின்றார் ஆழ்வார். அதுவே பிறவிப் பெருங்கடல் நீந்துவதற்கு ஏற்ற புணை யாகும் என்பது அவருடைய அசைக்க முடியாத நம்பிக்கை. அவன் தாளை வணங்குவதற்கு அவன் அருள் வேண்டும் என்பதை நன்கு உணர்ந்தவர் ஆழ்வார். எனவே, பரந்தசிங்தை ஒன்றிகின்று நின்னபாத பங்கயம் கிரந்தரம் கினைப்பதாக நிேனைக்க வேண்டுமே.”* |பாதபங்கயம்-திருவடித் தாமரை: நிரந்தரம்.இடை விடாமல்.: என்று வேண்டுவர். இக்கருத்தினையே, 76. நான். திருவந். 63 77. திருச். விருத். 100 78. டிெ. 101