யோடும் துடிப்போடும் இருந்தால் இந்த நாட்டில் எல்லாவகைச் சுரண்டல்களையும் உடனே ஒழித்துவிட முடியும்! சுமார் ரகசினிமாக்களும் மயக்க மருந்துபோல் காமவெறியைப் பரப்பும் பத்திரிகைகளும் இந்நாட்டு இளைஞர்களை இன்னும் அரை விழிப்பு நிலையிலேயே வைத்துள்ளன. பிற்போக்குச் சக்திகளின் கையில் சிக்கியிருக்கும் இந்த இரண்டு சாதனங்களும் திருந்தாதவரை நாட்டுக்குள் சுரண்டலை ஒழிப்பது மிகவும் சிரமமான காரியமாகத்தான் இருக்கும்.”
பூமியின் இந்தக் கருத்தில் இருந்த அடிப்படை உண்மை சித்ராவின் மனத்தைக் கவர்ந்தது. இளமை, புதுமை என்ற வார்த்தைகளையே கேவலபடுத்திக் கொச்சையாக்குவது போல் இளமைக்கதை, புதிய அலைக்கதை என்றெல்லாம் காமாந்தகார எழுத்துக்களுக்குப் பெயர் சூட்டுவதைக் கண்டு இந்நாட்டு இளைஞர்கள் எதிர்க்கவோ. எரிச்சலடையவேர் செய்யாததிலிருந்து அவர்கள் இன்னும் . அரைவிழிப்பு நிலையில்தான் இருக்கிறார்கள் என்பது உறுதியாகிறது. இந் நாட்டு இளைஞர் சக்தி திட்டமிடப்பட்ட முறையில் இன்று வீரியமற்றதாக்கப்படுகிறது என்பது பற்றிப் பூமியின் கருத்து மிகவும் சரியான கணிப்பு என்றே சித்ராவுக்குத் தோன்றியது.
அவன் தன்னைப் பாலாஜி நகரில் இறக்கிவிட்டுப் போன பின்பும் நெடுநேரம் வரை அவள் அவனைப் பற்றியும் முத்தக்காள் மெஸ் வாயிலில் சமூக விரோத சக்திகளை எதிர்த்து அவன் துணிந்து போராடிய தீரத்தைப் பற்றியுமே எண்ணிக் கொண்டிருந்தாள். பூமியின் மேல் அவளுக்கு அன்பும் பரிவும் பெருகின. அப்போது அவள் மனம் நிறைய அவன் ஒருவனே சிந்தனையானான்.
எந்த ஒருவிதமான இலட்சியமும், பிரக்ஞையும் பிடிப்பும் இல்லாமலே வெறும் செலுலாய்ட் பொம்மைகளைப் போல் தியேட்டர்களையும், ரெஸ்டாரெண்டுகளையும் சுற்றி வரும் இலக்கற்ற இளைஞர் கூட்டத்திலிருந்து பூமி தனியே விலகிக் கோபுரமாக உயர்ந்து காட்சியளித்தான். அவனுக்கு